பக்கம்:வானொலி வழியே.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைவாழ் மக்கள் கின்றனர். இவர்களில் சிலர் பரிசில்களில் காசுக்கு மற்ற வர்களை ஏற்றிச் செல்வர். இம்மக்கள் எளிய முறையிலேயே மணச் சடங்குகளே மேற்கொள்வர். பெற்ருேர் முன்னின்றே மணம் நடைபெறு கின்றது. கருவுற்ருல் மூன்ரும் மாதம் சீமந்தம் செய்த பிறகு தாய் வீட்டுக்குப் பெண்களே அனுப்புவர். மகப்பெறும் போதும் மகளிர் பூப்பெய்தும் போதும் பல சடங்குகளே வைத்திருக்கின்றனர். இவர்கள் பல பண்டிகைகளையும் விழாக்களையும் கொண்டாடுகின்றனர். பண்டிகையை நோன்பி என்றும் "சாட்டுதல் அல்லது 'சாற்றுதல்' என்றும் சொல்லுகின் றனர். மாரியாயி நோன்பு இவர்களுக்கு முக்கியமானது. பிறர் கொண்டாடும் பொங்கல், கார்த்திகை போன்ற விழாக் களையும் இவர்கள் கொண்டாடுவர். மருள் ஆடும் வழக்கம் உண்டு. மருள் ஆடுதலே 'உடம்பு நிரப்புதல் என்கின் றனர். இவர்கள் தெய்வத்தை மருள் வழி வரவழைத்து, அதன் வார்த்தையின் படியே விழாக்கொண்டாடுவர். பாலை மரத்தில் முத்தலைக் கிளையை வெட்டிக் காவிரியாற் றில் விடுவர். அது காவிரி வழியே சென்று எங்காவது ஒரத்தில் தங்கும். மருளாடி அதனைக் கண்டு, கொண்டு வந்து கோயிலில் வைத்து விழாத் தொடங்க ஏற்பாடு செய் வார். பிறகு நவதானியம் முளைக்க வைத்துக் காப்புக் கட்டுவர். இதில் கங்கணம் கட்டியவர் ஒழுங்காக-முறை தவருது விரதமிருப்பர். தவறின் தெய்வம் தண்டிக்கும் என அஞ்சுவர். விழா நாட்களில் மாலை வேளைகளில் சேவ லாட்டம், வண்டி வேட விளையாட்டு போன்ற விளையாட்டுக்களும் உண்டு. விழா எட்டு முதல் பதினைந்து 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/69&oldid=900797" இலிருந்து மீள்விக்கப்பட்டது