பக்கம்:வானொலி வழியே.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே நாள் வரை நடைபெறும். விழாவின் இறுதியில் தெய்வம் வாக்கு வழங்கும். அதுவே இவர்தம் வாழ்வுக்கு வழிகாட்டி. இவர்கள் அந்தத் தெய்வ நம்பிக்கை அடிப்படையிலே வாழும் மனநிறைவு பெற்ற நல்ல பழங்குடிகளாவர். அவர் தம் நம்பிக்கையும் நல்ல பண்பும் சிறப்பனவாக! சிவாச்சாரத்தர் சிவாச்சாரத்தார் தமிழ் நாட்டு வடமேற்கு மூலையில் வாழ்பவராவர்; சிவ ஆச்சாரமுடைய வீர சைவர். குழந்தை முதல் அனைவரும் இலிங்கம் கட்டிக்கொண்டுள்ளனர். மஞ்சுமலை, தொடுவமலே, குடகர் மலே, போயனூர் ஆகிய பலவிடங்களில் சிறு சிறு ஊர்களில் வாழ்கின்றனர். குடகர் மலேயைச் சார்ந்த கரிசித்தனூரில் இவர்தம் வாழ்வை நான் கண்டேன். இவர்கள் பெரும்பாலும் 3000 அடி உயரத் துக்கு மேற்பட்ட மலைகளில் வாழ்கின்றனர். பலர் சமவெளி ஊர்களைப் பார்த்தவர். அல்லர். உதகையில் வாழ்வார் போன்று இவர்கள் மலையை பெட்டா என்கின்றனர். இவர்கள் மொழி கன்னடம். மைசூர் நாட்டு எல்லையில் இவர்தம் வாழிடங்கள் உள்ளமையின் அவர்தம் மொழியும் சமயமும் இவர்களே ஆட்கொண்டன போலும், இவர்களுள் சிலர் தாம் வடக்கிருந்து வந்ததாகவும். உதகைப் படகரும் இவரும் ஒரே இனத்தவர் என்றும், படகர் பொருளாதாரத் தில் உயர்ந்து வாழத் தாம் எளிய கிலேயில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இவர்கள் உணவில் சைவராக இருந்து பஞ்சத்தால் அசைவராக மாறியவர். இவர்கள் வேறு யார் வீட்டிலும் உண்ண மாட்டார்கள். தாங்களே உணவைக் கொண்டு செல்வர். அல்லது தாங்களே சமைத்துக் கோள்வர். 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/70&oldid=900801" இலிருந்து மீள்விக்கப்பட்டது