பக்கம்:வானொலி வழியே.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைவாழ் மக்கள் இவர்கள் கிறைய மாடுகள் வைத்துள்ளனர். எனினும் இலவசமாகவன்றிப் பால், தயிர், நெய் முதலியவற்ை JD விலைக்குத் தரமாட்டார்கள். தந்தால் பாவம் என எண்ணு கின்றனர். பெண்கள் இடுப்பில் புடவைக்கு மேல் கயிறு அல்லது வெள்ளி ஒட்டியாணம் அணிகின்றனர். திருநீறு அணிவர்-எப்போதும் நெற்றியில் நீறு இருக்கவேண்டும். பெண்கள் ஓரிரு பூக்களையே தலையில் அணிவர். பச்சை குத்திக் கொண்டால் பேயணுகாது என நம்புகின்றனர். வீடுகள் சிறியவை; செம்மையானவை. இவர்கள் மூங்கில் நார்களாலேயே பாய் முடைகின்றனர். அம்மை நோய்க்கு இவர்கள் பெரிதும் அஞ்சுகின்றனர். இவர்கள் வேட்டை ஆடி மான், புலி முதலியவற்றையும் அடிப்பர்; ஆயினும் உண்ண மாட்டார்கள். சிலர் பில்லி, சூன்யம் முதலிய மந்திரங்களைச் செய்கின்றனர். பச்சில் வைத்தியமே செய்து கொள்ளுகின்றனர். இவர்கள் தெய்வம் வீரபத்திரரே. 'அவனன்றி ஓரணுவும் அசையாது' எ ன் ற அசையாத் கொள்கை உடையவர்கள் இவர்கள். விழாக் காலங்களில் வீர மக்கள் ஆட்ட்ம் என்ற கூத்தாடுவர். இதனை ஈர் மக்கள் கூட்டம் எனவும் கூறுவர். இறைவனே நம்புவ தாலேயே நலமாக வாழ்வதாகச் சொல்லுகின்றனர். இலிங் கத்திற்குப் படைத்த பிறகே அனைவரும் உண்பர். இவர்கள் குருவும் இவர் மரபினரே. இவர்கள் கொச்சைத் தமிழில் கன்னடம் கலந்து பேசு கின்றனர். பெரியவர்களைப் புண்ணிய ஆத்மா என்கின் றனர். காண் ஐய' என்பதனே காணிய' என்பர். "எந்த ஊர் என்பதனை யாவூர்' என்பர். போகிய, பண்ணிய, கொளிய என்பன முன்னிலை வின்ேகளாக அமைகின்றன. 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/71&oldid=900803" இலிருந்து மீள்விக்கப்பட்டது