பக்கம்:வானொலி வழியே.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே பெண்கள் மகப்பேறு காலத்தில் தாயையும் சேயையும் தனியாக அறையில் இருக்கவைப்பர். பதினேராம் நாள் குரு வந்து தீட்டுக் கழித்த பிறகே அவர்களைச் சேர்ப்பர். அப்போதே குழந்தையின் கழுத்தில் இலிங்கம் இடுவர். அது என்றும் உடனிருக்க வேண்டுவது. வயது வந்த பெண்கள் ஊர்ப்புறத்தே தாய் மாமன் கட்டிய பச்சோலைக் குடியி லேயே தங்கவேண்டும். கருவுற்ருல் தனிச் சடங்கு இல்லை. மகளிர் ஏழாம் மாதம் தாய் வீடு சென்று குழந்தை பிறந்த பின் வரிசையுடன் வருவர். மணங்களெல்லாம் கூட்டு மணங் களாகவே அமையும். இளைய ஆடவர் வயது முதிர்ந்த பெண்களேயும் மணப்ப துண்டு. இருபது வயது ஆண் காற்பது வயதுப் பெண்ணையும் மணப்பதுண்டாம். மணத்தில் இனிப்பு முதலிய இடம் பெறும். மணத்தின் மறுநாள் மஞ்சள் நீர் வதுவை விளையாட்டு உண்டு. பொடி வீசும் சுண்ண விளை யாட்டும் உண்டு. மணம் நடந்த பின் விருப்பமின்றேல் பணம் தந்து யாரும் பிரிந்து கொள்ளலாம். இறந்தால் பக்கத்து.ஊரில் உள்ள அனைவரும் அன்றே வரல் வேண்டும். அதற்குக் கடக் - கடக் - கடக் என்று மூன்று முறை ஒலி எழுப்புவர். சமாதி இடும் வழக்கம் உண்டு. பிற சடங்குகள் அதிகம் இல்லை. ஆண்டுக் கடனும் கிடையாது. பொங்கல் இவர்களுக்கு முக்கிய பண்டிகை. மாட்டு விழா உப்பு. வைத்தல் என்று கொண்டாடப்பெறுகின்றது. மாரியம்மனுக்கும் இவர்கள் விழாச் செய்வர். அத்தெய்வத் தைப் பட்டாளம்மன் என்பர். புதன்கிழமையும் புலி வாகன 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/72&oldid=900805" இலிருந்து மீள்விக்கப்பட்டது