பக்கம்:வானொலி வழியே.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம் - உரைநடை (20ம் நூற்ருண்டு வரை) 26-10-67 தமிழில் உரை' என்ற சொல்லுக்கு 'ஒலி என்ற அளவில் பொருள் இருந்தகாலம் உண்டு. பரிபாடல் குன்றம் குமுறிய உரை' என்றே குறிக்கின்றது. எனவே இச்சொல் பொதுவாக உண்டாகும் ஒலிகளுக்கு என அமைந்து, பிறகு மக்கள் வாயால் உரைக்கப்பெறும் உரைக்கும் பெயராக அமைந்தது என்பது தேற்றம். மக்கள் தம் உள்ளக் கருத்தை உலகுக்கு உணர்த்தப் பயன்படுத்துவது உரையாம். இனி உரை என்பதற்கு புகழ் என்ற பொருளும் உண்டு என்பதை உரைசால் பத்தினி என்ற சிலப்பதிகாரத் தொடர் நமக்கு விளக்குகின்றது, பொன்னின் தரம் அறியத் தட்டான் கல்லில் உரை இட்டுப் பார்ப்பதும் 'உரை'யாக உள்ளது. இவற்ருல் உரை என்பது மக்கள் உள்ளக் கருத்தை உணர்த்தப் பயன்படும் ஒன்று என்பதோடு ஒன்றின் உண்மையான இயல்பை விளக்கப் பயன்படும் ஒன்று என்பதும் தெளிவாகின்றது, உரைக்கப்படுவன அனைத்தும் உரையாயின், அவ்வாறு உரைக்கப்படும் பாட்டும் உரையாமோ என்ற ஐயம் எழுதல் 1. பரிபாடல் 8.35 72.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/74&oldid=900808" இலிருந்து மீள்விக்கப்பட்டது