பக்கம்:வானொலி வழியே.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம்-உரைநடை இயல்பு. இந்த ஐயத்தைப் போக்கவே மேலேகாட்டார் நன்கு ஆராய்ந்து பாட்டையும் உரையையும் பாகுபாடு செய்துள்ளனர். உரைநடை என்பது இலக்கிய மரபு கெடாத நல்ல நடையில், ஆழ்ந்த கருத்தோடு, பாட்டின் சந்தச் சேர்க்கை இன்றியே, நல்ல ஓசை நயம் உடையதாகி, ஒளி மறைவு இன்றி உள்ளதை உள்ளபடி உரையிட்டுக் காட்டும் வகையில், கேரிய முறையில், கருத்துக்கும் காரணத் துக்கும் பொருத்தமாக - ஒன்றனப்பற்றியோ ஒருவனைப் பற்றியோ-விளக்கி உரைப்பதாகும். உரைநடையென்பது நேராகச் சொற்களைக் கொண்டு விளக்குவது எனவும்: எழுத்து கடையிலோ பேச்சு கடையிலோ காட்ட விழைந்த பொருளே, சந்த அமைப்பு இல்லாமல் தெளிவாக விளக்குவது எனவும் பிறர் காட்டியுள்ளனர். பாட்டோ இவற்ருேடு கற்பனை நயம், சந்தம் முதலிய பொருந்தி வளர்வதாகும். இல்வாருய உரைநடை நம் தமிழ் மொழியில் மிகப் பழங்காலக்தொட்டே இருந்து வந்துள்ளது தமிழ் இலக்கிய வரலாற்றில் நமக்கு ஒரு மைல் கல்லாக இருப்பது தொல் காப்பியமே. அத்தொல்காப்பியத்துக்கு முன்பே பல இலக்கியங்கள் இருந்துள்ளன என்பதை அதன் குத்திரங் களால் நன்கு அறிகிருேம். தொல்காப்யியத்துக்கு முன் தமிழ் நாட்டில் உரையும் பாட்டும் இருந்தன என்றும் அவற்றுள் உரையே காலத்தால் முந்தியது எனவும் காண்கின்ருேம். தொல்காப்பியச் செய்யுளியல் 238ஆம் குத்திரத்தில் 1. Encyclopedia Britanicca vol 18 pp 59l & 592. 2. Chamber's Twentieth Century Dictionary p. 738 3. Oxford Dictionary p. 925 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/75&oldid=900810" இலிருந்து மீள்விக்கப்பட்டது