பக்கம்:வானொலி வழியே.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே " தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே" என உரைநடை காட்டப்பெறுகின்றது. இச்சூத்திரத் துக்கு உரை எழுத வந்த இளம் பூரணர் "நிறுத்த முறை யானே தொன்மைச் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று' எனக் காட்டி 'தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத் தாகிய பொருள்மேல் வருவது' என விளக்குகிருர். பேராசிரியரும் 'தொன்மை என்பது உரை விராய்ப் பழைமைவாகிய கதைப் பொருளாகச் சொல்லப் படுவது' என்கிருர், எனவே பாவாகச் செய்யப் பெறும் ‘பாச்செய்யுளிலும் உரைச்செய்யுள் காலத்தால் முந்தியது என்பது தெளிவு. செய்யப்படுவனவெல்லாம் செய்யுள் ஆதலின் இரண்டையும் செய்யுள் எனவே காட்டினர். தொல்காப்பியர் காலம் இன்றைக்குச் சற்றேறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பது தெளிவு. எனவே கடந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழில் உரைநடை இருந்திருக்கின்றது எனக் காண முடிகின்றது. இலத்தீன், கிரேக்கம் போன்ற மொழி களிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உரை கடையில் நூல்கள் இருந்தன என அறிகிருேம், ஆனல் தமிழ் உரைநடை பற்றிய விரிவான இலக்கணமும் அவற்றின் நிலைபேறும் நம்மால் காணமுடியவில்லையே என எண்ணத் தோன்றும். உரைநடை மிக எளிமையாக அனைவராலும் பேசவும் எழுதவும் பெற்றமையின் அதற்குத் தனி இலக்கணம் எழுத வேண்டிய தேவை இல்லையன்ருே? எழுதினும் அது எல்லையற்று விரியும் என்பதும் தெளிவு. ஆனல் சிறப்பான கவிதைகளுக்கு இலக்கண வரம்பு இன்றி 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/76&oldid=900812" இலிருந்து மீள்விக்கப்பட்டது