பக்கம்:வானொலி வழியே.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம் - உரைகடை யமையாத ஒன்ருனமையின் அதற்கென இலக்கண நூல்கள் உண்டாயின. அப்படியே வழக்காற்றில் உள்ள உரை நடையை யாரும் பழங்காலத்தில் படி எடுத்து வைக்க நினைக்கவில்லை. ஏட்டில் எழுதும் தொல்லைகளுக் கிடையிலும் மிகச் சாதாரணமான வகையிலும் உரைநடை படி எடுக்கப் படவில்லை எனலாம். அதனலேயே அக் காலத்தில் உரைநடை இல்லை என மறுத்தல் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகுமோ? இந்த ஐயத்துக்கு இடமில்லா வகையில்தான் தொல்காப்பியர் அதன் தொன்மையை விளக்கச் சூத்திரஞ் செய்து விட்டுச் சென்றனர். இனி, அத்தொல்காப்பியர் காலந்தொட்டு வளர்ந்த உரை நடை வகையினைக் காண்போம். தொல்காப்பியர் காலத்திலும் கடைச்சங்க காலத்திலும் வழக்கத்தில் இருந்த உரை நடை நமக்குக் கிடைக்கவில்லை. சங்கப் பாடல்களுள் சில, தனிச்சொற்களால் இடை நிறுத்தப்பெற்று உரை யெனச் சொல்லினும், அவற் றை யாரும் உரையாகக் கொள்வதில்லை. எனவே நமக்குத் தெளிந்த உரை தடை காப்பிய காலத்திலேயே கிடைக்கின்றது. கடைச்சங்க காலத்திற்குப் பிறகு உண்டான காப்பியம் சிலப்பதிகாரம். அது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' எனவே அழைக்கப் பெறுகின்றது. சிலம்பில் சங்க காலத்தில் ஆசிரியத்தோடு பல வரிப்பாடல்களும் இசைப்பாடல்களும் இடம்பெறுவதோடு, உரை கடையும் இடம் பெறுவதறிகிருேம். எனவே நமக்குக் கிடைக்கும் தமிழ் உரை நடையில் பழமையானது சிலம்பின் நடையே யாகும். 75.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/77&oldid=900814" இலிருந்து மீள்விக்கப்பட்டது