பக்கம்:வானொலி வழியே.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே "அதுகேட்டு, கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான், கங்கைக்கு காட்பலி பீடிகை கோட்ட முந்துறுத்து, ஆங்கு அரங்தை கெடுத்து வரந்தரு மிவள் என, ஆடித்திங்கள் அகவையி னங்கோர் பாடிவிழாக் கோள் பன்முறை எடுப்ப, மழை வீற் றிருந்து வளம்பல பெருக்கி, பிழையா விளேயுள் காடாயிற்று' இது சிலம்பின் உரைக்கு ஒர் எடுத்துக்காட்டு. இவ்வாறே சில இடங்களில் உரை நடை-சிலம்பின் உரை நடை செல்லுகின்றது. இவ்வாறு அந்த இரண்டாம் நூற்ருண் டின் இடைப்பட்ட காலத்தில் தமிழ் உரை நடை, தனியாக இன்றேனும் பாவொடு கலந்து இலக்கிய மரபிலேயும் மக்கள் வாழ்வின் பேச்சு மரபிலேயும் வளர்ந்து வாழ்ந்து வந்தது என்பது தெளிவு. . சிலப்பதிகார காலத்தை அடுத்த சில நூற்ருண்டுகளில் த்மிழகத்தில் எத்தனையோ மாறுதல்கள் உண்டாயின. எத் தனயோ வேற்று நாட்டவர் இக்காட்டில் ஆணசெலுத்தித் தத்தம் சமய, பண்பாட்டு நாகரிகங்களை வளரச் செய்தனர். அதல்ை தமிழர்தம் மொழி, சமயம், வாழ்க்கை, பண்பாடு, நாகரிகம் அனைத்துமே மாறுதல் பெற்றன. ஏழாம் நூற் ருண்டின் தொடக்கத்தில் நாம் காணும் தமிழ்நாட்டிற்கும் சங்க காலத் தமிழ்நாட்டிற்கும் எத்தனையோ வேறுபாடுகளைக் காண்கிருேம். எனினும் உரை நடையைப் பொறுத்த வரையில் ஒன்றையும் நம்மால் புதிதாகக் காணமுடியவில்லை. பின்னர் எட்டாம் நூற்ருண்டினதாகக் காணப்பெறும் இறையனர் களவியலுரையே நமக்கு உரையாகக் காட்சி தருகின்றது. ஆனல் உரையாசிரியர் கடைச்சங்க காலத்து நக்கீரனர் என்பர். ஆயினும் அவர் காலம் இரண்டாம் 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/78&oldid=900816" இலிருந்து மீள்விக்கப்பட்டது