பக்கம்:வானொலி வழியே.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம் - உரைநடை நூற்ருண்டிற்கு முற்பட்டதன்ருே, எவ்வாறு அவர் எட்டாம் நூற்ருண்டில் உரை செய்திருப்பார்? இக் கேள்விக்கு அவ்வுரையே சான்று தருகின்றது. அவ்வுரை செவி வழியாகவே கேட்டுக்கேட்டுப் பல தலைமுறைகள் கழித்தே உருவாயிற்று என விளக்கம் காண்கின்ருேம். எனவே அவ்வுரை, கடைச்சங்க காலத்தில் இருந்து எட்டாம் நூற்ருண்டு வரையில் தமிழ்நாட்டின் உரைநடை, பேச்சி லும் எழுத்திலும் இருந்து வந்தது என்ற தெளிவையும் அதே வேளையில் அந்த இடைவெளியில் அவ்வுரைகடை எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது என்பதையும் நன்கு விளக்கிக் காட்டுகிறது. ஏழாம் நூற்ருண்டில் எழுந்த சமய இலக்கியங்களைப் போன்றே, இந்த உரையிலும் வட மொழி வாடையை ஓரளவு காணமுடிகின்றது. எனினும் தமிழ் உரை நடையில் ஏற்றமும் சிறப்பும் இதில் விளங்கக் காண்கின்ருேம். "யாங்ங்னம் நிற்குமோ வெனின் சந்தனமும் சண்பகமும் தேமாவும் திம்பலாவும், ஆசினியும் அசோகும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் கறவும் நந்தியும் மாதவி யும் மல்லிகையும் மெளவலோடு மணங்கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையும் பிணியவிழ்ந்து, பொரிப்புன்கும் புன்னகமும் முருக்கொடு மு ைக சி ற ங் து, வண்டறைந்து தேர்ைந்து வரிக்குயில்கள் இசைபாட, தன் தென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செயும் பொழிலது நடுவண், ஒரு மாணிக்கச் செய்குன்றின் மேல், விசும்பு துடைத்துப் பசும் பொன்பூத்து, வண்டு துவைப்பத் தண்தேன் 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/79&oldid=900818" இலிருந்து மீள்விக்கப்பட்டது