பக்கம்:வானொலி வழியே.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே துளிர்ப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்" (பக் 25) என்று அவ்வுரை அழகுறச் செல்லுகிறது. எட்டாம் நூற்ருண்டிற்குப் பிறகு தமிழில் உரை நடை நூற்ருண்டுதோறும் பல்வேறு வகையில் மாற்றம்பெற்றும் வேறுபாடுற்றும் வளர்ந்து கொண்டே வந்துள்ளது என்ப தைத் தமிழ் இலக்கிய வரலாற்று எல்லையில் கின்று காண் பார் யாவரும் உணர்வர். இறையனர் களவியல் உரையை ஒட்டி, அக்காலத் துக்குப் பின்வந்த நூற்ருண்டுகளில் பல உரைகள் உண் டாயின. தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல் களுக்கும் பத்துப்பாட்டு, சிந்தாமணி போன்ற இலக்கிய நூல்களுக்கும் கற்றுத்துறைபோய நல்லறிஞர்கள் விளக்கங் காட்டும் வகையில் உரைகள் எழுதினர்கள். நச்சினர்க் கினியர், சேனவரையர், இளம்பூரணர், பேராசிரியர் பரிமேலழகர், அடியார்க்குகல்லார் போன்ருர் இவர்களுள் முக்கியமானவர்கள்; இவர்கள் காலத்தால் வேறுபட்டவர் களே. ஏறக்குறைய ஒன்பதாம் நூற்ருண்டு தொடங்கிப் பன்னிரண்டு பதின்மூன்ரும் நூற்ருண்டு வரையில் இத் தகைய உரையாசிரியர்கள் பல சங்ககால இலக்கியங் களுக்கும் பிற்காலக் காப்பியங்களுக்கும் தொல்காப்பியத் துக்கும் உரை எழுதினர்கள். அந்த இலக்கண இலக்கிய நூல்களின் ஆழ்ப்பொருள்களே இவை விளக்கியதோடு, தமிழ் உரை ைடயி ன் தரத்தையும் உயர்வையும் உலகுக்குக் காட்டின. இவ்வுரைகளைப் பயில்வார் உண் மையில் அக்காலத்தில் வாழ்ந்த புலவர்தம் உரை நடை எழுதும் ஆற்றலே நன்கு உணரமுடியும். ஒருசிலர் தம் உரை நடையில் வேற்று மொழிச்சொற்களே பழங்காலத் 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/80&oldid=900822" இலிருந்து மீள்விக்கப்பட்டது