பக்கம்:வானொலி வழியே.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம் - உரைநடை திலும் அதிகமாகப் பயன்படுத்தினர்கள் எனினும் அக்காலத் திய உரை நடை போற்றற்குரியதேயாகும். இந்தப் பழைய உரையாசிரியர்களே ஒட்டிப் பிற்காலத்தில்-- பதினரும் நூற்ருண்டிற்குப் பிறகு வந்த சிவஞான முனிவர், சங்கர நமச்சிவாயர், சைவ சொக்கப்ப நாவலர் போன்ற கல்லறிஞர்கள் பல நூல்களுக்கு உரை எழுதிச் சென்றனர். தொல்காப்பிய முதற்குத்திரத்திற்கும் பாயிரத். துக்கும் சிவஞான போதத்துக்கும் சிவஞான முனிவர் எழுதிய விருத்தி உரைகளும் பாடியமும் சிறந்த உரை கடைகளாகப் போற்றப்பெறுகின்றன. சென்ற நூற்ருண் டிலும் இந்த நூற்ருண்டிலும் இவர்களே ஒட்டிப் பல இலக்கியங்களுக்குத் தெளிந்த உரை எழுதுபவர் பலர் உள்ளமை அறிகிருேம். எனவே தமிழ் உரை நடை இவ்வாருய நூல்களின் விளக்கங் காட்டும் முகத்தான் நன்கு வளர்ந்தமை கண்கூடு. - இடைக்காலத்தில் தமிழ் உரை நடை மற்ருெரு, வகையிலும் வளர்ந்தது. ஆம் - கற்கள் உரை நடையை வளர்த்தன. பாறைகளும் கோயில் மதிற் சுவர்களும் தமிழ், உரை நடையை வளர்த்த பெருமைக்கு உரியன. இடைக் காலத்தில் வாழ்ந்த தமிழக மன்னர்களும் மற்றவர்களும் தாம் ஆற்றிய அறப்பணிகள் பற்றிய நிலைத்த குறிப்பினை அவ்விடங்களில் செதுக்கி வைத்தனர். அவற்றுள் முற் பகுதி பெரும்பாலும் அவ்வக் காலத்தில் ஆண்ட அரசர் தம் புகழ்பாடும் மெய்க்கீர்த்திகளாக அகவற்பாவில் அமைய, பிற்பகுதியாகிய செய்தி உரை நடையாகவே. இருக்கக் காண்கின்ருேம். இவற்றை வடித்தவர்களுள் பலர் கல்லா மாந்தர்களாகவும் இருந்தமையின் அவ்வுரை நடை கலப்பு மொழியில் அமைந்துள்ளது. எனினும் தமிழ், 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/81&oldid=900824" இலிருந்து மீள்விக்கப்பட்டது