பக்கம்:வானொலி வழியே.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே -உரை நடையை வளர்த்த பெருமை இக்கற்களுக்கும் உண்டு. - இடைக்காலத்தில் இலக்கிய மரபு சிறிது மங்கத் தொடங்கியது. வட மொழியை அதிகமாகக் கலத்தலே பெருமைக்குரிய செயலாக மதிக்கப்பெற்றது. இந்த கிலே உரை நடையிலும் காண்கிருேம். ‘மணிப்பிரவாள நடை எனப்பெயர் தந்து, மணியும் பவளமும் இணைந்தாற் போன்று வடமொழியும் தமிழும் இணைந்து எழுதிய காலம் ஒன்று தமிழ் இலக்கிய வரலாற்றில் உள்ளது. வைணவ இலக்கிய 'ஈடு' எனும் உரையும் பூநீபுராணம் முதலிய உரை நடை கால்களும் பிறவும் அந்த வகையைச் சார்ந்தன. அவையும் தமிழ் உரை கடை வளர்ச்சியில் பங்கு கொள்ளுகின்றன என்ருலும், அவை தமிழ் உரை நடை மரபுக்கு மாறுபட்ட வகையில் அமைந்த காரணத்தால் சிறக்க வாழாது எங்கோ ஒரு சிலரிடை கின்று நிலைகுலைந்தன. இன்று அவை நல்ல தமிழிலே மொழி பெயர்த்தமையாலே ஓரளவு உணரப் பெறுகின்றன. பிற்காலத்தில், நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இன்றெனினும் ஆகந்தரங்கம் பிள்ளையின் காட் குறிப்பு போன்றன. தமிழ் உரை நடை வளர்ச்சியில் பங்கு கொண்டன என்பதையும் ஈண்டுக் குறித்தல்வேண்டும். (இவைகள் அனைத்தையும் மேற்கோள் காட்டி விளக்கின் எல்லேயற்று விரிவடையும் என்ற காரணத்தால் இவ்விளக் கங்களோடே மேலே செல்கின்றேன்.) இவ்வாறு தொல்காப்பியர் காலந்தொட்டு வளர்ந்த தமிழ உரைநடை கடந்த ஒரிரு நூற்ருண்டுகளில் மிக நன்கு வளர்ச்சியுற்றமையைக் காண முடியும். மேலே காடு களிலிருந்து ஆட்சியின் பொருட்டும் வாணிபத்திற்காகவும் சமயம் வளர்க்கவும் தமிழ்நாட்டை நாடிவந்த பலருள்.சிலர் 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/82&oldid=900826" இலிருந்து மீள்விக்கப்பட்டது