பக்கம்:வானொலி வழியே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம் - உரைநடை தமிழ்மொழியை நன்கு பயின்று, அம்மொழியில் இலக்கியம் எழுதும் அளவிற்குச் சிறந்திருந்தனர். ஒரு சிலர் தாமே பாட்டு, உரைநடை, இலக்கியங்கள் எழுத, ஒருசிலர் ஊர் தோறும் சென்று ஆங்காங்கே வழங்கிவந்த கதைகளையும் பிறவற்றையும் தொகுத்து உரைநடையில் வெளியிட்டனர். தத்துவபோதகர் என்ற இராபர்ட்-டி-கோபிலி (Robert-DeNobili) என்பாரும் வீரமா முனிவரும் தத்தம் சமய உண்மைகளை உரைநடையில் வடித்துள்ளனர். மெக்கன்சி’ (Mackenzie) ,696bægir (H. M. Wilson) grgör (přL Të (John Murdock) போன்ற அறிஞர்கள் ஆங்காங்கே ஊர் தோறும் சென்று மக்களோடு பழகி, அவர்தம் வரலாற். றையும் வழக்காற்றுக் கதைகளையும் பிற பழக்க வழக்கங் களையும் தமிழ் உரைநடையில் எழுதி வைத்தனர். இவை யாவும் தெளிந்த நடையில் உள்ளன எனக் கொள்ளமுடியா விடினும் இவையும் தமிழ் உரைகடை வளர்ச்சிக்கு உதவின. என்பதை மறுக்க முடியுமோ? சென்ற நூற்ருண்டிலும் அதற்கு முன்பும் தமிழில் உரைநடை மிக அதிகமாக வளர்ச்சியுற்றமையைக் காண் கிருேம். அவ்வளர்ச்சிக்கு மேலைநாட்டினர் மட்டுமின்றி" அவர் வழியே வந்த அச்சுப் பொறியும் இதழ் முதலியனவும் அரசியல் அறிக்கைகளும் சமுதாய வாழ்வு பற்றிய வரலாற்று நூல்களும் வழி வகுத்தன. இந்தியாவிலேயே முதல் முதல் அச்சான நூல் தமிழ் நூலே. 1578ல் அம்பலக் காட்டில் 'தம்பிரான் வணக்கம்' என்ற கத்தோலிக்கச் சமய நூல் தமிழில் முதல்முதல் அச்சிடப்பெற்றது. அச்சகங்கள் நாட்டில் வளரவளரப் பல்வேறு நூல்கள் உரைநடையில் எழுதி வெளியிடப்பெறலாயின. உலக அறிவியல் வளர்ச்சி" பெருகப் பெருகவும் செய்தி அறியும் அவாமிகவும் பல்வேறு: 81:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/83&oldid=900828" இலிருந்து மீள்விக்கப்பட்டது