பக்கம்:வானொலி வழியே.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே

நாள் இதழ், கிழமை இதழ், திங்கள் இதழ் போன்றவை எல்லா நாடுகளிலும் வளர்ந்தமை போன்று.தமிழ்நாட்டிலும் வளரலாயின. 1830ஆம் ஆண்டுக்குப் பிறகே தமிழ்நாட்டில் இதழ் தொடங்க எண்ணினர். பிறகு பல வகையில் பல இதழ்கள் வெளிவரலாயின. அரசாங்கத்தாரும் தம் அறிக்கை, உத்தரவு, பிற செய்திகள் இவற்றைப் பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டித் தமிழில் தாள்களும் இதழ் களும் அவ்வப்போது வெளியிடத் தொடங்கினர். இவ்வாருய இதழ்களுக்கு அரசாங்கம், அஞ்சல் சலுகை' முதலியன அளித்து, அவை நன்கு வளர வாய்ப்பும் அளித்தது. சென்ற நூற்ருண்டு வரை இதழ்கள் அதிமாக வளர்ச்சி அடையவில்லை என்ருலும் இந்த நூற்ருண்டின் தொடக்கத்திலும் காடு உரிமை பெற்ற பின்பும் தமிழில் எண்ணற்ற இதழ்கள் தோன்றி வளர்ந்து வாழ்கின்றன. இவற்றுள் மிகப் பெரும்பாலான உரைநடை பற்றியனவே" எனவே இன்றைய உரைநடை வளர்ச்சியில் இவற்றிற்குப்

பெரும்பங்கு உண்டு. சென்ற நூற்ருண்டிலும் இந்த நூற்ருண்டிலும் கல்வித்துறையில் கணக்கற்ற உரைநடை நூல்கள் தோன்றி யுள்ளன. பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழை மட்டு மின்றி, தமிழில் பல்வேறு பாடங்களேயும் படித்த காரணத் தால், உரைநடையில் மாணவர் வகுப்பிற்கும் தரத்துக்கும் ஏற்ப பல்வேறு பொருள்களைப் பற்றி. நிலவியல், சமூகவியல், வரலாறு, அறிவியல் பற்றி-உரைநடையில் பல நூல்களை எழுதினர். அப்படியே தமிழில் நல்ல உரைநடை நூல்கள் பாடங்களாக அமைந்தன. எனவே தமிழகக் கல்வித்துறையும் உரைநடை வளர்க்க உதவியது எனலாம். 82,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/84&oldid=900830" இலிருந்து மீள்விக்கப்பட்டது