பக்கம்:வானொலி வழியே.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம் - உரைநடை சமயத்துறையிலும் உரைநடை வளர்ச்சியுற்றது. கிறித்துவம், முகமதியம், சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் தத்தம் உண்மைகளே மக்களுக்கு எளிய முறையில் உணர்த்துவதற்காகப் போட்டியிட்டுக் கொண்டு சிறியவும் பெரியவுமாகப் பல நூல்களே வெளியிட்டன. கிறித்துவர் விவிலிய நூலைப் பல்வேறு வகைகளில் உரை கடையில் மொழிபெயர்த்து மக்களுக்கு வழங்கினர். பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் போன்ற பாட்டு நூல்களை எல்லோரும் படித்து உணர்ந்து கொள்ளும் பொருட்டு உரைநடையில் பலர் எழுதி வெளி .யிட்டனர். இவைகளை யன்றி விக்கிரமாதித்தன் கதை, பன்னிரண்டு மந்திரி கதை போன்ற பல கதைகளும் -சாதாரண மக்கள் படித்தும் கேட்டும் மகிழத்தக்க வகையில் உரைநடையில் எழுதப்பெற்றன. சென்ற நூற்ருண்டில் வாழ்ந்த ஆறுமுக நாவலர், இராமலிங்க அடிகளார் போன்ற வர்களும் பிறரும் சமய உண்மைகளே எளிய வி ைவிடை வாயிலாகவும் கட்டுரை வாயிலாகவும் தமிழ் உரைநடையில் விளக்கிக் காட்டினர், சென்ற நூற்ருண்டின் இறுதிலும் இந்த நூற்ருண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த மறைமலை அடிகள், சாமிநாத ஐயர் போன்ருேர் தமிழ் உரைநடையில் எழுதிய நூல்களை நாடு நன்கு அறியும். அவர்தம் மரபில் எகின்று திரு. வி. க. போன்ற பேரறிஞர்கள் அறிவுக் களஞ்சியங்களாகப் பல நல்ல தமிழ் உரைநடை நூல்களே, ஆராய்ச்சி - பயணம்-சமயம்-தத்துவம்-தர்க்கம் போன்ற பல் துறைகளில் வெளியிட்டள்ளமையை நன்கு அறிவோம். இவ்வாறு கடந்த இரு நூற்ருண்டுகளில் தமிழ் உரைநடை கன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. - 83.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/85&oldid=900832" இலிருந்து மீள்விக்கப்பட்டது