பக்கம்:வானொலி வழியே.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே இவ்வுரைகடைத் துறையில் மிக முக்கியமானது நாவல், சிறுகதை, நாடகப் பகுதியாகும். சென்ற நூற்ருண்டில் மரியாதை ராமன் கதை (1812), முப்பத்திரண்டு பதுமை கதை (1804). சதமுக ராவணன் கதை (1818), தாடி வெண்ணெய்க்காரன் கதை (1843), விறலிமாறன் கதை. (1828), தமிழறியும் மடந்தை கதை (1812) முதலிய கதைகள் எழுதி அச்சிடப்பெற்றன. மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய, 1835ல் வெளியான, பிரதாப முதலியார் சரித்திரமே தமிழில் முதல் காவல் என்பர். அவர் முன்னுரையில் தமிழில் உரைநடை நூல் இல்லாக் குறையை நிறைவு செய்யவே அதை எழுதியதாகக் குறிக் கிருர். எனினும் அதற்கு முன்பும் அத்தகைய நாவல்கள் தமிழ் நாட்டில் உலவின எனக் காண்கிருேம். இன்று பலர் வரலாற்று அடிப்படையிலும் இலக்கிய உணர்வு அடிப் படையிலும் சமுதாயச் சூழ்நிலையிலும் பல்வேறு வகையில் காவல்களே வெளியிடுகின்றனர். அவ்வாறே சிறுகதையும் தமிழ் உரைநடையில் இன்று நன்கு வளர்ச்சியுற்றுள்ளது. இவற்றை எழுதும் ஆசிரியர்களும் இவற்றை வெளியிடும் இதழ்களும் பலப்பல. இவ்வாறே உரைநடையில் நாடகங் களும் பதினெட்டாம் நூற்ருண்டிலிருந்தே எழுதப்பெற்று வருகின்றன. பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள் இத்துறையில் மறக்க முடியாதன. இன்று. நாடக உலகைத் திரைப்பட உலகம் கைப்பற்றிய தென்ருலும் அத்திரைப் படமும் தமிழ் உரைநடையை வ்ளர்க்கின்ற தென்பதை அறிவோம். இவை மட்டுமன்றி. வானெலியில் பல் வேறுவகைப் பேச்சு வரிசையில் தமிழ். உரைகடை வளர்ந்து வருகின்றது. இன்று உயர்நிலைப் பள்ளியில் மட்டுமன்றிக் கல்லூரியிலும் அறிவியல் உட்பட எல்லாப் பாடங்களும் தமிழிலேயே பயிற்றப்பெற. 84.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/86&oldid=900834" இலிருந்து மீள்விக்கப்பட்டது