பக்கம்:வானொலி வழியே.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம் - உரைநடை வேண்டிய அடிப்படையில் பல்வேறு துறைகளில் தமிழ் உரைநடையில் நூல்கள் வெளிவருகின்றன. அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் எண்ணற்ற தமிழ் உரை நடை நூல்களே-இன்றைய அச்சுப்பொறி வளர்ச்சியின் பலத்தால், மக்கள் விரும்பும் வகையில் வெளிட்டு வருகின்றன. நூல் கிலேய அமைப்பு இந்த வகையில் பெரிதும் துணையாகின் நிறது. எனவே, இந்த நூற்ருண்டில்-கடந்த இருபத்தைந்து ஆண்டு. களில் தமிழ் உரைநடை அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ள மையைக் காண்கிருேம். அரசாங்கத்தாரும்-மைய மாநில அரசாங்கங்களும்-நல்ல நூல்களுக்குப் பரிசுகள் வழங்கும் திட்டங்களையும் மேற்கொண்டுள்ளர். இத்தனை வளர்ச்சிகளுக்கிடையிலும் நம் காட்டில் பிற மொழியாளர்களும் வெளி காட்டு மொழியாளர்களும் அவரவர் மொழியில் உரைநடையில் நூல்கள் எழுதி வளர்ச்சியுற்ற-வளர்ச்சியுறும் எல்லேயை நாம் அடையவில்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்திய நாட்டில் சில மொழிகளில், இன்றைய உலக அரங்கில் பேசப்பெறும் அறிவியல், சமுதாய சமய, வாழ்வியல் நூல்கள்-பல்வேறு கூறுபாடுகளில்-வகைகளில் எழுதப்பெற்று வருகின்றன. தமிழில் அத்தகைய வளர்ச்சி இல்லை என்பதை அவற்ருேடு தமிழை ஒப்புநோக்கி ஆய்வார் கண்டு வருந்திக் கூறு கின்றனர். எத்தனை எத்தனையோ வகைகளில் பல மொழி களில் புத்தம் புதிய கருத்துக்களேத் தாங்கி நூல்கள் வெளி வருகின்றன என்றும் அவற்ருேடு ஒப்புநோக்கி ஆராயப் போதிய தமிழ் உரைநடை நூல்கள் இல்லை என்றும் ஆய்வாளர் கருதுகின்றனர். எனவே சென்ற காலத்தின் 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/87&oldid=900836" இலிருந்து மீள்விக்கப்பட்டது