பக்கம்:வானொலி வழியே.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கு இலக்கியம் நல்ல உள்ளத்தில் உருவாவது, கற்றறிந்த கல்லவர், தாம் இன்புறுவது உலகின்புறக் காண நினைத்துத் தாம் பெற்ற இன்பத்தினை உலகுக்கு வாரி வழங்குவதே இலக்கியம். அந்த நல்ல இலக்கியம் காட்டில் நெடுங்காலம் உலவும் என்பது உறுதி. அத்தகைய நல்ல இலக்கியம் மக்கள் வாழ்வின் உண்மைகளை உள்ளடக்கிய தாய்-என்றென்றும் வாழும் உயிரினத்துக்கு வழிகாட்டியாய் அமையவேண்டும். - இலக்கியம் பெரும்பாலும் பாட்டினல் அமைவதைக் காண்கிருேம். உரை நடை இலக்கியம் பல தோன்றுகின் றன எனினும் அவை எந்த மொழியிலும் நல்ல இலக்கிய மாகக் காலத்தினை வென்று வாழ்வதைக் காண முடிய வில்லை. மாருக பாட்டிலக்கியம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்தும் சிறக்க வாழ்வதைத் தமிழில் மட்டுமன்றிப் பிற செம்மை சான்ற மொழிகளிலும் காண முடிகின்றது. இலக் கியங்களாகிய பாடல்கள் இவ்வாறு காலத்தை வென்று வாழக் காரணமென்ன? மேலே நாட்டில் இலக்கிய வளம் பற்றி ஆராய்ந்த புலவர்கள் அத்தகைய இலக்கியங்கள் என்றும் வாழக் காரணம், எங்கும்பொருந்தக் கூடிய பல 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/89&oldid=900840" இலிருந்து மீள்விக்கப்பட்டது