பக்கம்:வானொலி வழியே.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே உண்மைகளைத் தம்மிடம் கொண்டுள்ளமையே என்பர்." வின்செஸ்டர் என்பாரும் கவிஞனுடைய உயர்வு அவன் கெடிது நோக்கிப் பொருளாய்ந்து, எண்ணி, உணர்ந்து நல்ல பொருள் தெரிந்து, சான்ருண்மை அடிப்படையிலே கவி அமைப்பதிலேயே அமையும் என்கிருர். எப்பொருளைப் பற்றிப் பாடினும், எவரைப் பற்றிப் பேரிலக்கியங்கள் செய் யினும், எவர் பாடினும் இந்த அடிப்படை உண்மையைத் தத்தம் செய்யுளில் கொண்டு பாடிலைன்றி அது இலக்கிய மாக - பாட்டாகச் சிறக்காது என்பது தெளிவு. இத்தகைய அடிப்படை உண்மையைத் தமிழ் இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்பராமாயணம் போன்றவற்றில் காணமுடி கின்றது. அவற்றுள் காட்டப்பெறும் உண்மைகள் ஆழ்ந்து கோக்குவார்க்கு நன்கு புலகுைம் என்பது தெளிவு. கோவலன் கண்ணகி கதையைப் பாட வந்த இளங்கோ 1. A poet’s greatness must ultimately depend upon the greatness of his subject matter, the power of thought, which he brings to bear upon it, and his moral strength and influence . (Hudson - An introduction to the study of Literature - paget 95) 2. The unversal and undeniable truth of human nature thus form the stuff of the greatest literature. And he is likely to be the greatest writer who can make us realize the greatest number of truths, who can give us a sympathetic comprehension of the widest section of human life. (Winchester-Principles of Literary Criticism-p. 15-). 88.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/90&oldid=900844" இலிருந்து மீள்விக்கப்பட்டது