பக்கம்:வானொலி வழியே.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கு வடிகள் வெறும் கதையை மட்டும் பாடிச் சென்றிருப்பாரா யின், அது எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாழாது. அப் படியே கம்பன் பாடல் அத்தனை எதிர்ப்புக்களையும் அன்றும் இன்றும் ஏற்றும் வாழ்கின்றது என்ருல், அதில் இந்த அடிப்படை உண்மை பொருந்தி இருப்பதே காரணமாகும். இந்த உண்மை எல்லா மொழி இலக்கியங்களுக்கும் பொருந்துவதாகும். பாட்டு பல்வேறு வகை அடிப்படையில் அமையினும் இந்த உயிரோட்டமே அப்பாட்டை வாழ வைக்கிறது. செய் யுளியல் அல்லது யாப்பியல் நூல்களிலும் பகுதிகளிலும் காணும் பல பாவியல் அமைப்புக்களைப் புது உறுப்புக் களாக அமைத்து, பாவின் தோற்றத்தை எடுத்துக் காட்டு மேனும் அதன் உயிரோட்டமாகிய இந்த உற்றுணர்ந்து நோக்கும் உண்மையை உணர்த்தும் அடிப்படைத் திறனே அப்பாட்டை வாழவைக்கிறது என்று உண்மையை உணர வேண்டும். இந்த அடிப்படை உண்மையைப் பிற்காலத்தில் யாப்பிலக்கணம் செய்த பல புலவர்கள் உணரவில்லையா யினும் செய்யுளியலில் தொல்காப்பியர் இந்த உண்மையை உணர்ந்து தெளிவாகக் காட்டியே செல்கின்ருர். பாவினுக்கு உறுப்பினைப்பலவாருகக் காட்டிய பிற்காலக் காப்பிய புலவர்கள் "எழுத்து, அசை, சீர், பந்தம், அடி, தொடை,பா, பாவினம் எனக் காட்டினரேனும், தொல் காப்பியர் செய்யுளியல் முதல் குத்திரத்தில் இவை மட்டும் ‘பா’வாகாவென்பதனையும் இவற்றிலும் இன்றியமையாத உயிரோட்ட நிலக்களன்கள் உள என்பதையும் விளக்கிக் காட்டத் தவறவில்லை. இதற்குக் காரணம் இலக்கணப் புலவரல்லர்: இலக்கியப் புலவர்களே. பிற்காலத்தில் பாட் டிசைத்த இலக்கியப் புலவர்கள் பொருளுக்கும் அதன் வழி 89%

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/91&oldid=900846" இலிருந்து மீள்விக்கப்பட்டது