பக்கம்:வானொலி வழியே.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வ்ழியே உய்த்துவரும் வாழ்வியல் சிறப்புக்கும் இடம் தராது வெறும் எலும்புக்கூடு போன்ற புற உறுப்புக்களாகிய சொல்லடுக்குகளை அமைத்தே தம் இலக்கியங்களைப் படைத் துள்ளனர். இவர்தம் அவல நிலையைச் செல்வகேசவராய முதலியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தம் 'தமிழ் என்னும் நூலில் விளக்கிக் காட்டியுள்ளார். இந்த அடிப்படைக் காரணத்தினலேயே பழங்கர்ல இலக்கியங்கள் காலத்தை வென்று வாழ்ந்து வெற்றி வாகை குடிவரும் வேளையில், பிற்காலப்(என்புச் சட்டகங்களாகிய) பாடல்கள் தோனறிய சில நாட்களுக்குள்ளாகவே மறைந்துவிடுகின்றன. எனவேதான் தொல்காப்பியர் முன்னரே உணர்ந்து, அவர் காலத்தில் வாழ்ந்த இலக்கியங்களைத் தெளிந்து, பாவும் அதன் வழியே உருவாகும் இலக்கியமும் புற உறுப்புக் களோடு, பல அக உறுப்புக்களையும் பெற்றிருக்கவேண்டும் என வற்புறுத்துவர். அத்தகைய உறுப்புக்களுள் ஒன்றே :கோக்கு என்பதாம். நோக்கு என்பதற்குச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி ஆங்கிலத்தில், Attractive Grace என்றும், தமிழில் 'ஒசை முதலியவற்ருல் கேட்டாரை மீட்டும் தன்னே நோக்கச் செய்யும் செய்யு ளுறுப்பு என்றும் பொருள் தந்துள்ளது. இப்பொருள் ஒரளவு பொருத்த முள்ளதாகத் தோன்றினும், இதுவே முற்றிய பொருளாகக் கொள்ளமுடி யாது. நல்ல வேளை ஓசை முதலிய என்று கூறியுள்ள மையின் முதலிய என்பதில் பொருள், உட்பொருள், இறைச்சி முதலிய அடங்கிக் கிடப்பனவாகக் கொள்ளலாம். மேலே ஆங்கிலப் புலவர் காட்டியவாறு, புறத்தோற்றத் தின் பொலிவினை மட்டும் நோக்காது, அப்பாடல்தன் அகத் தின் பொருட்கள் - வாழ்க்கை உண்மைகள்-நெறிகள் இவற் 90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/92&oldid=900847" இலிருந்து மீள்விக்கப்பட்டது