பக்கம்:வானொலி வழியே.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கு றையெல்லாம் நோக்கி, அப்பாடலை - இலக்கியத்தை மதிக்க வேண்டும் என்பதாகும். இந்த உண்மையைத்தான் கோதா வரியைப் பாட வந்த கம்பன், புவியினுக் கணியாய் ஆன்ற பொருள்தந்து புலத்திற் ருவி அவியகத் துறைகள் முற்றி ஐந்திணை நெறியளாவி சவியுறத் தெளிந்து தன்ணென் ருெழுக்கமும் தழுவிச் சான்ருேர் கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார் எனக் காட்டுகின்ருர். ஆம் ஆன்றவிக் தடங்கிய கொள்கைச் சான்ருேர் பாடல்கள் பயில்தொறும் நூல்நயம் காட்டி இவ்வாறு சிறந்து விளங்கும் என்பது தேற்றம். இந்த உண்மைகளையெல்லாம் உள்ளடக்கித்தான் தொல்காப்பியர் நோக்கு என்பதைச் செய்யுள் உறுப்பாகச் செய்யுளியல் முதற் குத்திரத்திலேயே விளக்கிச் செல்லுகின்ருர். இலக்கியத்தில் உள்ளுணர்வு அடிப்படையும் அறிவின் செறிவும் இயையின் பிற குறைபாடுகள் இருப்பினும் அந்த இலக்கியம் சிறந்ததாகப் போற்றப்படும் என்பது ஆய்வாளர் கொண்ட முடிவு. பிற உறுப்புக்களும் கிறைவுற்றிருப்பின் பொன்மலர் காற்ற முடைத்து' என்பது போன்று அவ்விலக் கியம் எல்லா வகைகளிலும் ஏற்றமுற்று விளங்கும் என்பது தேற்றம். அத்தகைய அறிவின் செறிவினல் ஆக்கப் பெறுகின்ற இலக்கியத்தைப் பயில்வாரும் அறிவின் செறிவுடையராய் இருப்பின் அவர் நோக்கு விரிந்ததாகி அந்த இலக்கியத்தின் அடிப்படை உண்மைகளே உண்ர முடியும்; உணர்ந்து உலகுக்கு உணர்த்த முடியும். இந்த அடிப்படையிலேயே பல கல்ல உரையாசிரியர்கள் இலக் கியங்களுக்கு எண்ணற்ற நல்ல விளக்கங்களைத் தந்துள் 91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/93&oldid=900848" இலிருந்து மீள்விக்கப்பட்டது