பக்கம்:வானொலி வழியே.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே ளனர். அவர்தம் விரிந்த தெளிந்த அறிவும் கூர்த்த நோக்கமுமே பல இலக்கியங்களைச் சாகா வரம் பெற்றன வாகச் செய்துவிட்டன. அவர்தம் நோக்குக்கு ஏற்ப அவர்கள் கொண்ட நல்ல இலக்கிய நூல்களும் நூல்' என்ற அடிப்படைக்கு ஏற்ப நோக்குடைய நல்ல பாக்க ளால் அமைந்துள்ளன என்பதும் எண்ணத் தக்கது. நூலுக்கு இலக்கணம் கூறவந்த தொல்காப்பியர், நூலெனப் படுவது' முதலும் முடிவும் மாறுகோ னின்றிச் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உள்கின் றகன்ற உரையொடு பொருந்தி நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே ' (செய்யுளியல் - 160) எனக் காட்டுவர். எனவே நூல் சிறந்த பொருண்மை உடையதாக இருக்கவேண்டும். உள் நின்றெழுந்த சிறந்த, வகையில் அகன்ற உரை விளக்கம் தரத்தக்கதாகவும் நுண்ணிதின் நோக்கி விளக்கத் தக்கதாகவும் அமைய, வேண்டும் என்பது தேற்றம். 'நுண்ணிதின் விளக்கல்' என்பதற்குப் பருப்பொருட்டாகாது நுண்பொருட்டாகப் பொருள் விளக்கல்’ என உரை எழுதுவர் நச்சினர்க்கினியர். எனவே, பாடல்கள் பல ஆழ்ந்த நுண்ணிய பொருள்களே உள்ளடக்கியனவாக அமைதல் வேண்டும் என்பது தெளி வாகின்றது. அத்தகைய நுண்பொருள்களே நுனித்து நோக்கி அறியப் பயன்படுவது நோக்கு அன்றி வேறு. யாது? தொல்காப்பியர் தம் செய்யுளில் முதற் சூத்திரத்தில் செய்யுள் உறுப்பாவனவற்றை விளக்கி வரும்போது, 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/94&oldid=900849" இலிருந்து மீள்விக்கப்பட்டது