பக்கம்:வானொலி வழியே.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கு பல்வேறு உறுப்புகளைக் காட்டி, அவற்ருல் ஆய பாட்டினைக் காட்டுவதற்கு முன்புதான் இந்நோக்கினே வைத்துள்ளார். 'பா'வின் பின்பு அளவியல், திணை, கைகோள் முதலிய அப் பாவானது பற்ற வேண்டிய பொருள், பயன் போன்று அமைந்த பலவற்றை விளக்கிக் கொண்டு செல்கின்ருர். எனவே, உறுப்புக்களால் ஆய பாட்டினைப் பின்வரும் பொருள்கலம் பற்றியும் பயன் தருவது பற்றியும் எண்ணிக் கண்டு எடுத்துக் காட்ட இந்த நோக்கே பயன் தருகின்றது என உணரவைத்துள்ளார். முதற்குத்திரத்துள் அனேத்துடன் ஒன்றுபடுத்திக் காட்டிய ஆசிரியர் தொல்காப்பியர், " மாத்திரை முதலா அடிநிறை காறும் நோக்குதற் காரண கோக்கெனப் படுமே” (செய்யுளில்-104): என விளக்கியுள்ளார். இதற்கு உரை கூற வந்த மூன்று. உரையாசிரியர்களும் பலப்பல வகையில் பாவினே நோக்கும் திறங்களே எண்ணிக் காட்டுகின்றனர். எடுத்த பொருளை நோக்கியே மாறுபடாது முடிக்கும் கிலேயினே கோக்கெனக் காட்டுவர் இளம்பூரணர், 'யாதானும் ஒன்றைக் கொடுக்குங் காலத்துக் கருதிய பொருளே முடிக்கும் காறும் பிறிது. நோக்காது அது தன்னேயே நோக்கி கிற்கு நிலை' என்ருர் அவர். 'பலவும் நோக்கி உணர்வதற்குக் கருவியாகிய சொல்லும் பொருளும் எல்லாம் மாத்திரை முதலா அடிகிலே காலும் என அடங்கக் கூறி கோக்குதற்குக் காரணம் நோக்கென்ருர் என்பது - எடுத்த பாட்டின் இலக்கண அமைதியை நோக்குவதும் கோக்காகும்” என்பது பேரா சிரியர் வழியே பெறப்படுவதாகும். ஆகவே பாவின் சொல் 93.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/95&oldid=900850" இலிருந்து மீள்விக்கப்பட்டது