பக்கம்:வானொலி வழியே.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலிவழியே லமைப்பு, பொருள்மைப்பு இரண்டையுமே நோக்கி, அவற்றின் அமைப்பு, தன்மை, விளக்கம், நுண்பொருள் ஆகிய அனைத்தையும் பொருந்த விளக்க வருவது நோக்கு, என்பது தெளிவாகின்றது. இத்தகைய நோக்கினே இழந்த காரணத்தினுல்தான் தற்காலத்தில் பலர் நல்ல இலக்கியங்களைப் பயின்று பயன் பெற முடியாது விணே கழிகின்றனர். கச்சிர்ைக்கினியர் இரண்டினேயும்.இணைத்து மாத்திரை முதலிய உறுப்புக் கொண்ட அடி நிரம்பும் துணையும், கேட்டார் மீண்டும் நோக்கிப் பயன் கோடலையுடையவராகச் செய்யும் கருவியை நோக்கு என்று கூறுவர் என்பர். இவ்வாறு கூறியதோடு, அந்நோக்கு செய்யுளின் ஒவ்வொரு அடியிலும் அமையவேண்டும் என்ற உண்மையை அடியிறை காறும் என்றது. ஓரடிக் கண்ணன்றி வந்த வடி எத்துணையாயினும் கின்ற முடிகாறும் எனக் காட்டி ஒவ்வொரு அடியும் விளக்கும் பல உண்மைப் பொருள்களே ஆராய்வது நோக்கு என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டு கின்ருர் இதற்கு எடுத்துக் காட்டாக, அகநானூற்றின் நான்காவது பாடலக் காட்டியும், அதன் ஒவ்வொரு அடியும் எவ்வாறு புறத்தும் அகத்தும் பொருள் பொதிந்து உள்ளது என்ற உண்மையை விளக்கியும் உரைக்கின்ருர். அப் பாடலில் வரும் அடிகளையும் தொடர்களையும் நோக்கி, எடுத்து, அவற்றை மீண்டும் மீண்டும் ஆழ்ந்து நோக்கி, அவர் கண்ட நுண்பொருள்களே நமக்குக் காட்டுகின்ருர். ஒன்றிரண்டு ஈண்டே அமையும் என எண்ணுகிறேன். 'பூத்த பொங்கர் என்பதல்ை பசிப்பிணி தீர நுகரும் பொருளேயது குறைவறக் கொடுப்ப உண்டு மகிழ்ந்து பின்பு 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/96&oldid=900851" இலிருந்து மீள்விக்கப்பட்டது