பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கையாழ்வர் - . 脅證 காட்டிய பெருமை உரையாசியர்கட்கு உண்டு. தோழி கூற்றாக வரும் பதிகங்களில் அநந்யார்ஹத்துவம் தெரியும், அநந்யார்ஹத்துவம் என்பது, மற்றவருக்கில் லாமல் ஈசுவரனுக்கே உரித்தாயிருத்தல். தாய்ப் பாசுரமாக வருவதில் பாரதந்திரியம் தெரியும். பாரதந்திரியம் என்பது, பகவானுக்கு வசப்பட்டிருத்தல். மகள் பாசுரமாக நடை பெறுவதில் சித்தோபாயம் தெரியும். அவனே உபாயம்’ என்ற கோட்பாட்டினையும் மீறிக் தான் நினைத்த பேற் றினை உடனே பெற வேண்டும் என்ற பதற்றத்தை உடைய வளாக இருக்கும் மனநிலை தெரியும். திருமங்கையாழ்வார் அருளிச் செயல்களில் தோழிப் பாசுரங்கள் இல்லை. விரிவஞ்சி எடுத்துக்காட்டுகளால் இந் நிலைகளை விளக்க வில்லை. திருமந்திரத்தின் பெருமை. இந்த ஆழ்வார் எம்பெரு மானிடம் நேராக எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்றவர். செல்கதிக்கு உய்யுமாறு எண்ணி நாராயணா' என்னும் நாமத்தை நல்துணையாகப் பெற்றவர். ஆதலால் இவர் சொல்லுகின்றார்: "நாராயணமந்திரத்தை அது சந்திப்பவர்கட்கு யாவரும் கொண்டாடும்படியான சேஷத்துவ ஞானமாகின்ற குலத்தைத் தரும்; அக்குலத்திற் கேற்ற கைங்சரியமாகின்ற பெருஞ்செல்வத்தை அளிக்கும்: தொண்டர்கள் அநுபவிக்கும் துக்கம் என்னும் பெயரை யுடைய எல்லாவற்றையும் தரைமட்டமாக்கும்; கைங்கரி யத்திற்கு இடையீடின்றி மேன்மேலும் வளர்ந்தோங்கச் செய்வதான பரமபதத்தைக் கொடுக்கும்; தன் கருணையி னால் தன்னை அநுபவிப்பதால் ஏற்படும் பேரானந்தத் தில் திளைக்கச் செய்யும்; தான் செய்யும் கைங்கரியத் திற்குக் தான் கருத்தா என்றும் அதை அநுபவிப்பவன் என்றும் நினையாமலிருத்தலாகின்ற வன்மையையும், சேஷத்துவ சொரூபததிற்கு ஏற்ற மற்ற தன்மைகளையும் தரும்; பெற்ற தாயைக்காட்டிலும் பல நலங்களைப் புரியும்," என்கின்றார் ஆழ்வார்.