பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ፇ4 அார்மோழியும் வாசகமும் AAtttttttSAtttttttttttttttAAAA AAAA AAAA AAAAaaCSAAAaaAAA AAAA AAAA AAAAAtttttt திருமங்கையாழ்வார் திருநறையூர் நம்பியிடம் திரு விலச்சினை பெற்றார் என்பதை முன்னர்க் குறிப்பிட்டேன். இதனால் நம்பி இந்த ஆழ்வ்ாருக்கு ஆசாரியராகின்றார். ஆசாரியருடைய திருநாமமே அநுசந்தேயமாதலால் பெரிய திருமந்திரமாகிய அத்திருநாமத்தைத் தாமும் அநுசந்தித் துப் பிறர்க்கும் கற்பிக்கும் முறையில் பேசுகின்றார் திரு நறையூர்த் திருமொழி யொன்றில் (6.10). திருக்குடந்தை யில் சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிப்பவனும் வரா காவதாரத்தில் பூமிப்பிராட்டியை அண்டபித்தியினின்றும் ஒட்டு வித்தெடுத்தவனும், இலங்கையை அழித்த செருமானும் மூவுலகை ஈரடியால் அளந்தவனுமாகிய பெருமானின் திருநாமம் நமோ நாராயணம்' என்பது. இத்திருமொழி முழுவதும் நாராயண நாமத்தைச் சொல்லும் போக்கிலேயே அமைந்துள்ளது. . பிறபத்திநெறி : இந்த நெறி சரணாகதி நெறியாகும். இஃது எல்லோரும் அநுட்டிக்கக்கூடியது. சுக்கிரீவன் வீடணன் காகம் (காகாசுரன்) திரெளபதி முதலியோர் இந்நெறியைக் கடைப்பிடித்தே உய்ந்தவர்கள். இந்தப் பிர பத்தி நெறியை உபதேசித்தவர் நம்மாழ்வார். இவரைப் "பிரபந்த ஜனகடஸ்தர்’ என்று வழங்குவதும் உண்டு. பிர பத்தி நெறியைக் கடைப்பிடிக்கும் வைணவர்கள் யாவர்க் கும் தலைவர் என்பது இதன் பொருள். இவர் பிரபத்தி செய்தது. அர்ச்சாவதாரத்திலேயாகும். திருமங்கையாழ் வார் கடைப் பிடித்த நெறியும் இதுவேயாகும். எல்லா ஆழ் வார்களும் இந்நெறியையே ஒரு குரலாகப் பேசுகின்றனர். நம்மாழ்வார் திரு வேங்கடவனைச் சரணம் புகுந்த அகல கில்லேன் இறையும் (திருவாய் 6.10:10) என்று தொடங் கும் பாசுரமே சரணாகதி தத்துவத்தை விளக்கும் திருமறை போன்ற பாசுரமாகும். முதலில் திருவேங்கடம் அடை நெஞ்சே! (பெரி. திரு.1.7) என்று ஒருமுறைக்கு ஒன்பது முறை கூறிய திருமங்கை ஆழ்வார் அந்த வேங்கடத் தெம் மானை நோக்கிப் பேசுகின்றார்: