பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

劉麗 வாய்மொழியும் வாசகமும் சூானத்தில் தம்பேச்சு பிரேமத்தில் பெண்பேச்சு என்று ஆசாரிய ஹிருதயம் என்ற பக்திப் பனுவல் குறிப் பிடும். நாயகி நிலையில் பேசும்போது ஆழ்வார்களின் ஆண்மைப் பெயர் நீங்கிப் பெண்மைப் பெயர் வழங்கப் பெறும். நம்மாழ்வார் (பராங்குசர்) சபராங்குச நாயகி: என்ற பெயரைப் பெறுகின்றார். திருமங்கையாழ்வார் (பரகாலர் பரகால நாயகி என்ற பெயரைப் பெறு கின்றார்: - ஆழ்வார் பெருமக்கள் சங்ககால நெறியை யொட்டி ஒர் அகப் பொருள் தத்துவத்தை அமைத்துக் காட்டிய பெரு மையிண்ணப் பெற்றனர். மகளிர்மீது வைத்துப் பேசப் பெறும் விஷவாந்திரகாமம்’ மாதவன் மீது வைத்துப் பேசப் பெறும் பகவத் விஷயகாமம்’ என்று பரிணாமமாக வளர்த்த பெருமை ஆழ்வார்களுக்கு உண்டு. தம் அகப் பொருள் பாசுரங்களில் விஷயாந்திர காமத்திற்குரிய துறைகள் யாவும் பகவத்விஷய காமத்திற்கும் வழங்கிய சிறப்பு இவர்கட்கு உண்டு. சிற்றின்ப அநுபவத்திற்குக் கொங்கை முதலியன சாதனமாயிருப்பது போல, பகவத் விஷயாதுபவத்திற்கும் பரபக்தி, பரஞானம், பரமபக்தி இவை இன்றியமையாதனவாக இருப்பதால் அவையே கொங்கை முதலான சொற்களால் ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் கூறப் பெறுகின்றன என்று சமயச் சான்றோர் பணிப்பர். இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும் பொழுது அவர்கள் பாசுரங்களும் தோழி சொல்வதுபோல் வடிவெடுத்துத் "தோழிப் பாசுரம் என்று பெயர்பெறும்; தாய் சொல்லுவதுபோல் வடிவெடுத்துத் தாய்ப்பாசுரம்’ என்று திருநாமம் பெறும். தலைவி பேசுவது போல் வடிவெடுத்து மகள் பாசுரம்' என்று வழங்கப் பெறும். இவ்வாறு அமைந்துள்ள பாசுரங்கட்குத் தத்துவம்