பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு:ங்கையாழ்வார் ## பணிகின்ற பாகவதர்களே தாம் வழிபடுவதற்கு உரியவர்கள் என்கின்றார், தண்ணார்ந்த கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே (2.6:1) தண்சேறை எம்பெருமான் தாள்தொழுவார் காண்மின்னன் தலைமே லாமே (7.4:1) என்ற திருமொழிகளில் இத்திருக் குறிப்பைக் கண்டு மகிழலாம், . ": , . - காயக.நாயகி பாவனை : பரம் ப்ொருளுக்கும் ஆன் மாவிற்கும் ஒன்பது வகையான உறவுகள் உண்டு என்ப தாகக் கூறுகின்றது திருமந்திரம். இது சம்பந்தஞானம் என்று பேசப் பெறும். இந்தச் சம்பந்த ஞானம் இல்லாத காரணத்தால் நாம் ஈசுவரனை விட்டுப் பிரிந்து பிறவிக் பெருங்கடலில் ஆழ்ந்து நீந்தமுடியாமல் துன்புறுகின்றோம். எம்பெருமானையும் நம்மையும் சேர்த்து வைப்பது இந்தச் சம்பந்த ஞானமே யாகும். இந்த ஞானம் இல்லாத பிறப்பு வீண் பிறப்பு ஆகும். இந்த ஒன்பது வகை உறவுகளில் தலை சிறந்தது நாயகநாயகி பாவனை யாகும். இந்த முறையில் பரமான்மாவைத் தலைவனாகவும் சீவான்மாவைத் தலைவியாகவும் கொண்டு பகவதநுபவம் நடைபெறும். திருமங்கையாழ் வார், நம்மாழ்வார் போன்ற ஞானச் செல்வர்களிடம் சில சமயம் ஞானம் தலைதுாக்கி நிற்கும்: அப்பொழுது அவர்கள் தாமான தன்மையில் தம் அநுபவத்தைப் பாசுரங் களாக அருளிச் செய்வர். சிலசமயம் அவர்களிடம் காதல் (பிரேமம்) மீதுார்ந்து நிற்கும்; அப்போது அவர்கள் பெண் பாவனையில் பாசுரங்களை அருளிச் செய்வர். இதனை :