பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*爵 வாய்மோழியும், வாசகமும் இான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன் (3.5:9) என்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டுப் பிரபத்தி செய்வதைப் பாசுரத்தில் காணலாம், இவ்விடத்தில், "சேவியக்கப் சேஷபூதன் இழியும் துறை பிரஜை முலையிலே வாய்வைக்கு மாப்போலே (முமுட்சு-147) என்ற முமுட்கப் படியின் வாக்கியம் சிந்திக்கத் தக்கது. ஈண்டு பிரஜை என்பது குழந்தை. பால் ப்ருகும் பச்சைக் குழவி எங்கனம் தாயினுடைய மற்ற உறுப்புகள் யாவற்றை பும் விட்டு, தான் உயிர் வாழ்வதற்கிடனாய் உள்ள அவள் கொங்கையில் வாய்வைக்கின்றதோ, அங்ங்ணமே சேஷியா கின்ற எம்பெருமானுடைய பல உறுப்புகளையும் விட்டு, தான் உய்வதற்கு இட்னாய் உள்ள அவன் திருவடிகளையே சீவன் (சேதநன்) பற்றுகின்றான் என்பதை இந்த வாக்கியம் அழகாய்ப் புலப்படுத்துகின்றது. கொங்கையில் வாய் வைத்தல் குழந்தைக்கு இயல்பாய் அமைந்ததைப் போலவே, திருவடிகளைப் பற்றும் செயலும் சேதநனுக்கு இயல்பாய் அமைந்துள்ளது என்பதை நாம் அறிதல் வேண்டும். மேலும்,

  • பிராட்டியும் அவனும் விடினும் திருவடிகள் விடாது திண்கழலா விருக்கும்: . -

முமுட்சு-148 என்று விளக்குவர் அந்த ஆசாரியப் பெருமகனார், - பிரபத்தி செய்வோருக்கு முக்கியமாக வேண்டப் பெறு பவை ஆகிஞ்சன்யமும் அகன்னிய கதித்துவமும் ஆகும். ஆகிஞ்சன்யம் என்பது, கன்மஞான பக்திகளாகின்ற மற்ற உபாயங்களில் தொடர்பற்றிருக்கை. அநன்னிய கதித்துவம் என்பது, ஆன்மா பாதுகாப்பிற்கு எம்பெருமானைத் தவிர,