பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ தி திருமங்கையாழ்வார் 芳? வேறொரு காக்கும் பொருள் அற்றிருக்கை, புகலொன் நில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே (திருவாய் 6.10:10) என்ற நம்மாழ்வார் வாக்கில் இதனைக் காணலாம். திருமங்கையாழ்வாரும், கலந்தான் ஒன்றுமிலேன் நல்ல தோரறஞ் செய்துமிலேன் (பெரி.திரு.1.9:4) என்று திருவேங்கடம் பற்றிய திருமொழிப் பாசுரம் ஒன்றில் இக்கருத்தினையே கூறியிருத்தலையும் காண்கின்றோம். புருஷகாரம் (தகவுரை: அல்லது சேர்ப்பிக்கும் தன்மை) பிராட்டிக்கு உரியது என்பது வைணவ தத்துவம், இங்கு அவள் புருஷகார பூதையாகச் செயற்படுகின்றாள். பிரபத்தி நெறியில் பெரிய பிராட்டியாரோடு கூடிய எம்பெருமான் திருவடிகளை உபாயமாகப்பற்ற வேண்டும் என்பது விதி. வைணவ மந்திரமாகிய துவயத்தின் முதற்பதமாகிய "பூர்மத் என்பதில்-மதுப்பால்’-இது மிகத் தெளிவாக விளக்கமடைகின்றது. இந்த மதுப்பு புருஷ்காரமான பிராட்டியும், உபாயமான பெருமானும் ஆகிய இவர் களுடைய நித்திய சேர்க்கையைத் தெரிவிக்கின்றது. மக்களுக்கு இறைவனும் இறைவியுமான இருவரோடு சம்பந்தம் இருக்கவும், இறைவனை அடையும்போது இவள் புருஷகாரமாக அமைவது ஏன்? என்ற வினா எழுகின்றது. இதனையும் விளக்க வேண்டியது இன்றியமையாததா கின்றது. சேதநன் தான் எம்பெருமானுக்குச் சேஷபூதன் (அடிமை) ஆகவும், எம்பெருமான் தனக்குச் சேஷி (தலைவன்) ஆகவும் இருக்கும் தொடர்பை நன்கு அறிந்த வன் என்பது உண்மையே. ஆயினும், இவள் தாயாம் தன்மையால் வந்த வாத்சல்யத்தை மிகுதியாக உடையவள்: தந்தையாகிய எம்பெருமானைப்போல் வன்மையும் ன்ெமையும் கலத்திராமல் மென்மையே வடிவு கொண்டி