பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; : வாய்மொழியும் வாசகமும் வள். பிறர் கண்குழிவு காட்டமாட்டாத தன்மையள்: தியமனமுடையவர்களையும் மருவித்தொழும் மனமுடைய வர்களாக்குகைக்குத் தக்க செயல் புரிபவள்; குற்றமுடைய வர்களும் கூசாமல் வந்து காவிலே விழலாம்படி இருப்பவள்: ஆண்மையால் வந்தவன்மையோடே தந்தையாம் தனமை யால் வந்த நலம் செயும் தன்மையுடைய வரையும், குற்றங் களைப் பத்துப் பத்தாகக் கணக்கிட்டுக் கொடிய தண்டனை களை விதிக்கும் செய்கையாலே, குற்றமுடையவர்கள் முன் செல்லக் குடல்கரிக்கும்படி இருக்கும்;சர்வேசுவரனைத் தக்க வழிகளாலே குற்றங்கள் அனைத்தையும் மறைப்பித்துச் இர்ப்பிக்கும் தன்மையள்; இத்தகை கவள் பாவமே செய்து பாவிகளான மக்கள் சர்வேசுவரனைப் பற்றுங்கால் புருஷ காரமாக வேண்டும்” என்பது மணவாளமாமுனிகளின் கருத் தாகும். (ரீ, வச. பூஷ, 7 இன்உரை). இதனைப் பிள்ளை உலக ஆசிரியர், "நீரிலே நெருப்புக் கிளருமாப் போலே, குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுக்காக (மூமுட்சு 127) என்று விளக்குவர். பகவான் மிக்க அருள் நிறைந்த திருவுள்ளத்தனாய் இருப்பினும், சேதநன் செய்யும் அளவு கடந்த குற்றங்கள், குளிர்ந்த நீரில் நெருப்புப் பிறத்தல் போன்று, அவனுக்குச் சீற்றத்தை உண்டாக்குகின்றன. அச்சிற்றத்தை மாற்றிக் கொண்டு இவனுடைய குற்றங் களைப் பொறுப்பது பிராட்டியாருக்காகவே என்பதை உளங்கொள்ள வேண்டும், பிராட்டியார் உலக உயிர்கட்குத் தாயாக இருப்பதால், இவர்களுடைய துக்கத்தைப் பொறாதவராயும் இருக் கின்றார். எல்லோருடைய அன்பைக் காட்டிலும் தாயன்பு சிறித்த தன்ற்ோ? பிராட்டியார் பகவானுக்குப் பத்தினியாக