பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமிங்கையாழ்வார் 恕等 என்ற பாடற்பகுதியும் ஈண்டு நம் நினைவில் எழுகின்றது. மனைவியைப் பிரிந்ததனால் உன் மதிகெட்டுப்போப் இங்ங்னம் மறைந்து நின்று அம்பு எய்த அடாத செயலைப் புரிந்தாயோ?” என்ற தொனி இதில் காணப்படினும், புருஷகார பூதையான பிராட்டி அருகில் இல்லாததனால் தான் எனக்கு இக்கேடு நேர்ந்ததோ?’ என்ற ஆழ் பொருளும் இதில் அடங்கிக் கிடக்கின்றதையும் சிந்தித்து அறிந்து மகிழ்கின்றோம், இங்ங்ணமாக, பிரபத்திக்குப் :பிராட்டியின் புருஷகாரம் இன்றியமையாததாகின்றது. ஆகவே, பிரபத்தி செய்யும்போது எம்பெருமான்எம்பெருமாட்டி ஆகிய இருவர் சேர்த்தியில்தான் இரக்க வேண்டியவர்களாகின்றோம் என்பதை அறிகின்றோம். இதற்கு எம்பெருமானார் (இராமாதுசர்) நம்மனோர் புரிந்த கொடிய குற்றங்களைப் பொறுக்குமாறு படிதாண் டாப் பத்தினியாகிய சீரங்க நாச்சியாரும் அழகிய மணவாளப் பெருமாளும் ஒரே சேர்த்தியில் எழுந்தருளி யிருக்கும் காலத்தை நோக்கிக் கொண்டிருந்து பங்குனி உத்தரத்தில் பிரார்த்தித்ததுவே தக்க சான்றாகும், இறுவாய் : திருமங்கையாழ்வார் மிகவும் ஈடுபாடு கொண்ட எம்பெருமான்கள் திருக்குடந்தை ஆரா அமுதனும் திருக்குறுங்குடி நம்பியும் ஆவர். நம்பி எழுந்தருளியிருக்கும் திருக்குறுங்குடியில்தான் திருமங்கையாழ்வார் தம் துணைவி குமுதவல்வியாரோடு தம் இறுதிக் காலத்தைக் கழிக் கின்றார். பரம விரக்தராய்ச் சிலகாலம் நம்பியின் வடிவழகைக் கண்டு அநுபவித்துக் கொண்டிருந்து அங்கிருந்தே திருநாட்டுக்கு எழுந்தருளுகின்றார். கலந்ததிருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழிதுே காசினியில் குறையலூர்க் காவலோன் வாழிதுே