பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வாய்மொழியும் வாசகமும்t இன்பமும் துன்பமும் நிறைந்து ஒளியும் இருளும் சூழ்ந் துள்ள இவ்வுலகில் வாழப் பிறந்தவன் மனிதன். இன்ப வெளியை நாடிச் செல்லும் அவனுக்கு வழிகாட்டுவதற்கு எய்ப்பினில் வைப்பாகக் கிடைத்திருப்புவை அநுபூதி நிலையை அடைந்த அருளாசிரியர்களின் அருளிச் செயல் கள். தமிழ் மொழியில் இவை எாானம், ஏராளம்: இவற்றுள் திருவாய் மொழியும் திருவாசகமும் ஈண்டு ஒப்பு நோக்கிக் காண்பதற்கு எடுத்துக் கொள்ளப் பெற்றன. இவற்றுள் நம் கவனத்தைச் செலுத்துவோம், இந்தக் கட்டுரையில் நாம் குறிப்பிடுவது: வாசகம்’ என்பது திருவாசகம், வாய்மொழி என்பது திருவாய் மொழி. திருவாசகத்தை அருளியவர் வாதவூரடிகள், திருவாய்மொழியை அருளியவர் மாறன் என வழங்கப்படும் சடகோபர் நம்மாழ்வார். வாதவூரடிகள் முறையாகக் கல்வி பயின்று கற்றுத்துறைபோய வித்தகரானவர். ஐம்புல இன்பமும் ஆரத்துய்க்கும் அரச வாழ்வில், அமைச்சர் பதவியிற் சிக்கி, பிறந்ததன் பயனைச் சிறிது மறந்திருந்த ஆன்மாவாகிய வாதவூரடிகட்கு இறைவன் திருப்பெருந் துறையில் குருந்த மரத்தடியில் குருமூர்த்தியாக எழுந்தருளி உண்மை ஞானத்தை உணர்த்த, அதன் விளைவாக எழுந்த, அநுபவ ஞானத்தைக் காட்டுவது திருவாசகம். கருவிலே திருவுடைய மணிவாசகப் பெருமான், f மதுரை - காமராசர் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் இராம. பெரிய கருப்பன் (தமிழண்ணல்) மணிவிழா மலரில் (1988) Quត្ដិ இந்தது. ジ. -