பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醫獸 வாய்மொழியும் வாசகமும் ஆருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் னுளமன்னிக் கருத்திருத்தி யூன்யூக்குக் § கருணைவினா லாண்டுகொண்ட திருத்துருத்தி மேயானை (475) என்ற பாடலில் தான் கருவிலிருந்த போதே 5ಿ னைச் சிவபெருமான் ஆட்கொண்டதாகக் கருதுவர் திருப்பெருக் துறையில் ஆட்கொண்ட சிறப்பை, . செக்தழல் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி அக்தணன் ஆவதும் காட்டிவம் தாண்டாய் (378) என்ற திருப்பள்ளியெழுச்சிப் பாடலாலும், தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாம் காட்டிச் சிவங்காட்டித் தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி காட்டார் நகைசெய்ய நாம் மேலை வீடெய்த ஆட்டான் (180) என்ற திருவம்மானைப் பாடலாலும் தெளிவிக்கின்றார். உயர்வற உயர்நலமுடையவனான எம்பெருமானால் மயர்வற மதிநலமருளப் பெற்றவர் சடகோபர். கருவிலே திருவுடையவர். திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் சந்நிதியிலுள்ள திருப்புளியாழ்வார் (புளியமரம்) அடியில் பதினாறு வ்யதளவும் கண் விழியாமல் மெளனமாக எழுந்தருளியிருந்தபோது பரமப்தநாதன் நியமனப்படி சேனை முதலியார் என்கின்ற விஷ்வக்சேனர் யாரும் இல்லாதபோது தனிமையில் எழுந்தருளி இவருக்குத்