பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாய்மொழியும் வாசகமும் ఫ్రీ திருவிலச்சினை செய்து எல்லாவித மந்திரார்த்தங்களையும் உபதேசித் தருளினார் என்பது வரலாறு. இந்த ஆழ்வார் ஒதாது உணர்ந்த ஞானச் சிறப்புடையவர் என்பதை, அறியாக் காலத்துள்னே அடிமைக்கண் அன்புசெய்வித்து அறிய மாமாயத்து அடியேனை வைத்தாயால் என்ற அகச்சான்றினால் அறியலாம். சடகோபர் திருப்புளியாழ்வார் அடியில் எழுந்தருளி யிருந்தபோது உலகியலைச் சிறிதும் நினையாமல் இறைவன் சிந்தனையிலேயே ஆழங்கால் பட்டிருந்தார். அப்போது இவரது ஞானக் கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை நோக்கி, தேவரீரை அநுபவிப்பதற்கு இடையூறான உடல் தொடர்பை அறுத்துத் தந்தருள வேண்டும் என்று சம்சார சம்பந்தத்தைப் புறக்கணிக்க நினைத்தார். ஆனால், எம்பெருமான் இவரது விருப்பத்தைத் தலைக் கட்டித் தந்தருளவில்லை. இந்த ஆழ்வார் சம்சாரத்தை விட்டுவிலகி நலமந்தமில்லதோர் நாட்டில் போய்ச் சேர வேண்டும் என்று பாரிப்பது தம்முடைய திருக்குணங்களை அநுபவிப்பதற் காகவே என்று திருவுள்ளம் பற்றிய எம்பெருமான் அந்த குணாதுபவத்தை இந்த லீலாவிபூதியிலேயே வாய்க்கச் செய்ய, அதனை அதுபவித்த ஆழ்வார் அவ்வதுபவம் உள்ளடங்காமல் புறவெள்ளமிட்டுப் பிரபந்தங்களாகப் பெருகியது. ஒரு தாய் தன் குழந்தைக்குச் செரிமான மின்மையை நீக்கிப் பசியை மிகுவித்துச் சோறிடுமாப் போலே எம்பெருமான் தமக்குச் சுவையைப் பிறப்பித்த படியையும், அந்தச் சுவை பரபக்தி, பரஞானம், பரமபக்தி களாகப் பக்குவமானபடியையும், பின்பு பிரகிருதி சம்பந்த மற்றுப் பேற்றோடே தலைக்கட்டினபடியையும் அருளிச் செய்தார் திருவாய்மொழியில்’.