பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&#ಪೀಡಿà#ಣಿಟ್ಟಿಸಿ ಕೆಟೆಗೆಆ೫ಕ್ರಿಸಿ 3 και: 勳 பெயர்க்காரணம்: திருவாசகம், திரு.அழகு, வாசகம்= வார்த்தை, சோல். திருவாசகம்-அழகிய சொல் என்பது: அதனையுடைத்தாகிய நூலை உணர்த்திற்று. திரு என்ப தற்குக் கண்டாரால் விரும்பப்படும் தன்மை, நோக்கம் என உரை காண்பர் பேராசிரியர், இதனைக் கண்டார் வேது எதனையும் விரும்பார் ஆதலின் புண்ணிய கூட்டம் கண்டி பக்குவ ஆன்மாக்களால் விரும்பப்படும் தன்மையுடைய அாசகம் என்றுக் போருள் கொள்ளலாம், பண்டிதமணி அவர்கள் திருவாசகம் என்பது அழகிய தெய்வத்தன்மை வாய்ந்த சொற்கனாலாகிய செய்யுள் நூல் என்னும் பொருளை உ ைட ய த கு ம். ... வாசகம் - சொல். இத்திருவாசகத் திருப்பாட்டுகள் தெய்வநலம் கனிந்த சொற்களாலும் சொற்றொடர்களாலும் அமைந்தவை; இனிமை, எளிமை, ஆழமுடைமை என்னும் குணங்கள் தம்பால் அமையப் பெற்றவை: மெய்யன்புடன் ஒதுவார் கேட்பார் உணர்வார் எல்லோரையும் மிக்க பேரின் பத்தில் திளைப்பித்துப் பரவசப்படுத்தும் இயல்பின; அநுபவ உண்மைகளைத் தெளிவுண்டாம்படி விளக்குவன' என்று தம் திருவாசகம் - கதிர்மணி விளக்கம்’ என்ற நூலில் விளக்குவார். - இவற்றைக் கருத்தில் கொண்டு திருவாசகம்’ என்ற நூலில் நுழைந்து பார்க்கும் போது அடிகளாரே வாக்குடன் மணிவார்த்தைக் காக்கி (30) என்றும், பேச்சிறந்த மாசில் மணியின் மணிவார்த்தை (632) என்றும், இறைவனைப் போற்றிப் பாடும் தமது மொழியை வார்த்தை என்று வழங்குவதைக் காண்கின்றோம். வார்த்தை', 'வாசகம்’ என்பன ஒரு பொருட்கிளவி, அன்றியும் இறைவன் தம்மை ஆட்கொண்ட அருள் விசேடத்தை உலகத்தவர்க்கு உரைப்பது போலவும், பிரிந்ததனால் உண்டான, வருத்தத்தைப்பற்றிப் பெருமானோடு உரையாடுதல் போல வுழு இந்நூல் முழுவதும் அமைந்திருத்தலின் பேச்சு முறை யின் அமைந்த இந்நூல் வாசகம் என வழங்கப் பெற்றிருக். கலாம் என்று நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.