பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசகமும் 爵疆 திருவாய்மொழி : திரு.உயர்வை விளக்கும் அடை மொழி. இது வாய்க்கும் அடைமொழி ஆகலாம்: வாய் மொழிக்கும் அடைமொழி ஆகலாம். மேன்மையுடைய வாயினால் சொல்லும் சொற்களினாலாகிய நூல் என்பது பொருள், உயர்வை விளக்கும் அடைமொழி கொடுக்கும்படி ஆழ்வாரது வாக்குக்குள்ள சிறப்பு அவரது திருநாவீறுடைய பிரான்" என்னும் திருநாமத்தாலும் விளங்கும். திருமங்கை யாழ்வாரின் அருளிச் செயலாகிய திருமொழியினும் வேறு பாடு விளங்குதற்கு இது திருவாய்மொழி எனப்பட்டது. வாய்மை தங்கியமொழி என்று வழங்குவாரும் உளர். ஆழ்வார் பாடிய முறையும் அவர்தம் திருவாக்குகளாலாயே தெளியலாம், ... . . . இவருடைய ஞானக்கண்ணுக்குப் புலனான இறைவன் இவருக்கு, . தேனும்பாலும் கன்னலும் அமுதும் ஆகித்தித்திப்ப (43:10) அவனை இடைவிடாது நினைப்பதனால் உண்டான தெவிட்டாத பேரின்பம் அப்போதைக்கப்போது புதியபுதிய ஆராஅமுதம் உண்டாற்போன்று பெருகி வளர்வதாயிற்று. பொறியுணர்ச்சியைக் கடந்த் உயிரின்கண் உண்டாகிய இன்பம் என்பதை, ஆரா அமுதாய் அடியேன் o ஆவி அகமே தித்திப்பாய் (5.8:10) எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே (6.10:1) என்பவை அவர்தம் திருவாக்குகள். இவர் பாடிய வாய்மொழிகள் யாவும் இறைவனது லாய்மொழிகளே என்பது இவர்தம் கருத்து. எல்லாம்