பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鄧發 வாய்மொழியும் வாசகமும் மயர்வுற மதிநலம் அருளின் (1, 1:1) இறையருளால் தம்மைக் கருவியாகக் கொண்டு நிகழ்ந்தன என்பதே ஆழ்வாரின் நினைவாக உள்ளது. என்கெஞ்சத்து உள்ளிருந்துஇங்கு - இருந்தமிழ்நூல் இவைமொழிந்து (10.6:4) என்றும், பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி 'தென்னா" என்னும் என் அம்மான் (10.7:6) என்றும் ஆழ்வாரே கூறுவர். ஒரு திருப்பதிகம் முழுவதும் (7.6) இவ்வாறே அமைந்துள்ளது. ஆம்முதல் வன்.இவன் என்றுதன் தேற்றிஎன் காமுதல் வந்து புகுந்து நல்இன்கவி து முதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன என் வாய் முதல் அப்பனை (7.9:3) என்றும், என் சொல்லால் யான்சொன்ன இன்கவி என்பித்துத் தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன் (7.9:2) என்றும் கூறுவர். என்னால் தன்னை, வன்கவி பாடும் என் வைகுந்தநாதனே' (7. 9:6) என்று மீண்டும் கூறுவர். இறைவனே அருளியதால் திருவாய் மொழி என்றும், "தமிழ் மறை” என்றும் யாழின் இசை வேதம்’ என்றும் இவ்வாய்மொழி வழங்கப்படுகின்றது. இறைவன் இரண்டு ஞானச் செல் வர் க ளு ம் இறைவனைப்பற்றிக் கொண்ட கருத்து கிட்டத்தட்