பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசகமும் 碧翼 ஒன்றுபோல் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். நம்மாழ்வார் இறைவனை திருவின் மணாளன் (1, 9:11, ஒமகளார் தனிக்கேள்வன் (1. 9:3), தனது சன் மணவாளன்’ (1, 10:4), ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப (4, 9:18), என்திருமகள் சேர்மார்வன்" (7. 2:9), திருமார்பன் (7. 6:6), திருவாழ்மார்பர் (8. 3:7), திருஅமர்மார்லன் (8, 6:3), செய்யாள் திருமார்வினில் சேர்திருமால் (9. 4:1}, திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் (10, 6:9). என்று திருமகளை-பெரிய பிராட்டியாரை.இணைத்தே பேசுவர்: பல இடங்களில் தாராயணனே அவன் என்றும் மொழிவர். மணிவாசகப் பெருமானும் இறைவனை மாதாளும் பாகத்தெந்தை (திருவா. 34), மானை நோக்கி தன் கூறன் (42), மானேர் நோக்கி உமையாள் பங்கன் (59); மேங்கையோர் பங்கன் (69),கொம்பரார் மருங்குல்மங்கை கூறன்" (7:1), இணங்குகொங்கைமங்கை பங்கன் (79), "பூண்முலை மங்கைபங்கன் (145) எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று (167), நந்தம்மையாளுடையாள் தன்னில் பிரிவிலா எங்கோமான் (170), மாதிருக்கும் பாதியனை" (181), பெண் சுமந்த பாகத்தன்’ (182), பெண்ணாளும் பாகன் (184), கிளிவந்தமென் மொழி யாள் கேள்கிளரும் பாதியணை (192), மாதியலும் பாதியன் (193), தேவியும் தானும் வந்தெம்மையாளச்' (196), மங்கைபங்கினன் (201), வரையாடு மங்கைதன் பங்கொடும் வந்தாண்டதிறம்" (240), பெண்பால் உகந்தான் பெரும்பித்தன்' (263), பழுதில்தொல் புகழாள் பங்கன் (455) என்று இறைவனைத் தையல் பாகனாகஅர்த்தநாரியாக-அம்மை அப்பனாகக்-காண்பர். முழுமுதற்கடவுள் சடகோபருக்கு நாராயணன் ஒரு வனே முழுமுதற்கடவுள்; ஏனையோர் சிறு தெய்வங்கள் மணிவாசகப் பெருமானுக்குச் சிவபெருமானே பரதெய்வம், ஏனையோர் புறத்தெய்வங்கள். இவர்களைத் தவிர