பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை பேராசிரியர் டாக்டர். அ. அ. மணவாளன் (தமிழ்மொழித் துறை சென்னைப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் ந. சுப்புரெட்டியாரை அறியாத தமிழறிஞர்களோ, தமிழ்க்கல்வி நிறுவனங்களோ, தமிழ் நாட்டுச் சமயப் பெரியார்களோ, சமயக் கல்வி தழைக்கப் பாடுபடும் சமய அமைப்புகளே தமிழ்நாட்டில் இல்லை என்று கூறினால் அது மிகையன்று. தமிழ் வரம்பறுத்த வடவேங்கடத்தின் திருவடி நீழலில் அமைந்துள்ள திருவேங்கடவன் பல்கலைக் கழகம் அவரைத் தமிழ்ப் பேராசிரியராக, தமிழறிஞரா , வைணவச் செம்மலாகப் போற்றிப் புரந்து வந்துள்ளது; இன்றும் புரந்து வருகின்றது. தமிழ் இலக்கியம், கல்வியியல், அறிவியல், சமயங்கள் எனப் பல்வேறு துறைகளிலும் அநுபவமும், பயிற்சியும், புலமை யும் பெற்ற பேராசிரியர் தம் அகவையினும் மிக்குப் பல நூல்களைப் படைத்துள்ளார். அவர்தம் வயதைக் கூட்ட இடையறாது முயலும் காலதேவனுக்கும் தம் படைப்பு களின் எண்ணி ையைக் கூட்டுவதில் கருமமே கண்ணா யிருக்கும் ரெட்டியார் அவர்களுக்கும் இடையில் நடந்து வரும் போட்டியில் பேராசிரிய தான் இதுவரை வெற்றி பெற்றுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துக் காலதேவனின் முயற்சியை முறியடித்துள்ளார்; இனியும் அவனைவென்று ஒரு நூறு நூல்களைப் படைத்துப் புகழ்பெறுவார் என்பதில் ஐயமில்லை; திருவேங்கடவன் திருவருள் முன்னின்று இதனைக் கூட்டுவிக்குமாக என்று அவன்தாள் இறைஞ்சி வ ண ங் கு கி ன் றே ன்; வாழ்த்துகின்றேன். இவ்வாறாகப் பாரோர் புகழும் பேராசிரியர் அவர்கள் தம்முடைய வாய்மொழியும் வாசகமும்' என்னும் இப்புதிய