பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix நூலுக்கு ஒர் அணிந்துரை வேண்டும் என்று என்னைப் பணித்த போது எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் முறையே தோன்றின. வியப்பிற்குக் காரணம், ரெட்டியார்நூலுக்கு அறிமுகமோ அணிந்துரையோ தேவையற்றது; அப்படி யிருக்க அணித்துரையெழுத என்னைப் பணிப்பானேன் என்ற சிந்தனை. ஆண்டுகள் பல கடந்தும் நூல்கள் சிலவும் படைக்காமல் காலம் கழித்து வரும் என்னைத் தாம் எழுதும் நூல்களையாவது படித்து ஊக்கப்பட்டு நானும் சில நூல்களையாவது எழுதிச் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும் என்னும் கருத்தால் எளிவந்து ஆட்கொள்ளக் கருதும் செளலப்பியம் என்று நான் உணர்ந்தமையே என் மகிழ்ச்சிக்குக் காரணம். அதனால் ஒருவாறு ஒருப்பட்டு இவ் அணிந்துரையை எழுதுகின்றேன். வாய்மொழியும் வாசகமும் என்னும் இந்நூல் பத்துக் கட்டுரைகளின் தொகுப்பாக விளங்குகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகப் பல காலங்களில் படைக்கப் பெற்ற கட்டுரைகளை அவற்றின் பொருளொற்றுமை கருதித் தொகுத்து இப்போது ஒரு நூலாகப் பேராசிரியர் தமிழகத்திற்கு வழங்கியுள்ளார். இவற்றுள் சமயமும் அறிவியலும்” , (பக் 1-42), :திருமங்கையாழ்வார்” (43-84), வாய்மொழியும் வாசகமும்”, (பக். 85-196), "சரணாகதிநெறி” (158.194) ஆகிய நான்கும் மிக நீண்ட கட்டுரைகள். நம்மாழ்வாரின் இ ைற ய நு ப வ ம்” (107.108), புலவர்க்கு அறிவுரை (119-135), கீதைமறைமுடியின் சாரம் (144-157) ஆகிய மூன்றும் இடை நிகர்த்த -త్తి 6Tణా 5 L.LJ పST *திருக்குறள் சமயவியல் சிந்தனைகள்” (136-143), தமிழ் முருகன்’ (195.201), நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்” (208-207) ஆகிய மூன்றும் வாமனவடிவின. - இந்நூலின் முதற்கண் அமைந்துள்ள சமயமும் அறிவியலும்” என்னும் கட்டுரை ஒவ்வாதன போலவும் முரண்படுவன போலவும் தோற்றமளிக்கும் இருபெரும்