பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(x) மானுட வாழ்வுத் துறைகள் எவ்வாறு ஒரே கருத்துடையன வாய்க் காணப்படுகின்றன என்பதை மிக ஆழமாகவும் அழகாகவும் விளக்குகின்றது. உலகமும் இறைவனும் உன்பொருள்கள்; இவற்றுள் இறைவனே முதற் காரணம்; உலகத் தோற்றமும் ஒடுக்கமும் அவனை முன்னிட்டே நிகழ்கின்றன; இத்தகைய தோற்ற மறைவுகள் வடிவ மாற்றங்களேயன்றி வேறல்ல என்றும் சமய உண்மைகளை வேதியியல் முதலான அறிவியல் துறைக் கோட்பாடுகளைக் கொடு ஆசிரியர் இனிது விளக்குகின்றார்; மேலும் அண்டங்களின் அமைப்பை விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒரே தன்மையில் விளக்கும் பாங்கினை மணிவாசகப் பெருமான், பரஞ்சோதிமுனிவர், பாரதியார் ஆகிய கவிஞர்களின் பாடல்களைக் கொண்டும், அறிவியலாரின் கொள்கைகளைக் கொண்டும் விளக்குகின்றார். அண்டங் களின் சுழற்சி குறித்தும் அதனால் விளையும் பெளதிக மாற்றங்கள் குறித்தும் அறிவியல் கண்ட செய்திகளை அரங்கனின் திருக்கோல அழகினைப் பரவும் திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கரரின் திருவரங்கத்து மாலையைக் கொண்டு விளக்கும் ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலமும் உள்ளொளி விளக்கமும் பெரிதும் வியந்து பாராட்டுதற்குரியன. இவ்வாறே சமய கோட்பாடுகளாகிய சற் காரிய வாதம், விசிட்டாத்துவிதம் என்பனவும், தமிழர் தம் திருநாளாம் பொங்கல் விழாவின் அடிப்படைத் தத்துவமும், அறிவியல் உண்மைகளோடு பொருத்தி விளக்கும் இக்கட்டுரை, இந்நூலின் முதலாவதாக மட்டுமின்றி முதன்மையானதாகவும் அமைந்து நம்மை மகிழ்விக்கின்றது. தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனாரைப் போன்று பரமபத நாதனால் தடுத்தாட் கொள்ளப் பெற்றவர் கலியன் என்று புகழ்பெற்ற திருமங்கையாழ்வார். இவரைப் பற்றிய இரண்டாவது கட்டுரை இவ் ஆழ்வாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருங்கக் கூறி இறைவன் இவரை ஆட்கொண்ட வரலாற்றையும் அதனால் ஞானக் கண்