பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(xi) திறக்கப் பெற்ற கலியனாழ்வார் மேற்கொண்ட திருத்தல பயணங்களையும், அவரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற அர்ச்சாவதாரங்களையும் விளக்கமாக எடுத்துரைக் கிறது. பின்னர்க் கலியனின் அருளிச் செயல்களில் காணப் பெறும் சரீர-சரீரி பாவனை, தத்துவத்திரயசாரம், பிரபத்தி நெறி போன்ற வைணவக் கோட்பாடுகளையும், இவரால் அறிமுகப்படுத்தப் பெற்ற பல்வேறு புதிய இலக்கிய உத்திகளையும், புதிய இலக்கிய வகைமை களையும் இக்கட்டுரை மிக அழகாக விளக்கிச் செல்கின்றது. திருமங்கையாழ்வார் என்னும் அருளாளரை முழுவதுவமாக அறிந்து அநுபவித்துச் சேவிக்க இந்தக் கட்டுரை பெரிதும் பயன்படுதலை ஒவ்வொரு வாசகரும் நன்கு உணர்வர். இறைவன், இறையநுபவம் என்னும் நிலைகளை மணிவாசகப் பெருமானும் நம்மாழ்வாரும் உணர்ந்து, துய்த்து பிறர்க்கெடுத்து உணர்ந்துள்ள திறம் ஒரே தன்மையவாய் அமைந்துள்ள பாங்கினை வாய்மொழியும் வாசகமும்' என்னும் கட்டுரை ஒப்பிட்டாய்ந்து கூறுகின்றது. பேராசிரியரின் சமயக் காழ்ப்பற்ற ஆளுமைக்குச் சான்று பகரும் இக்கட்டுரையைப் போலவே தமிழ் முருகன்' என்னும் கட்டுரையும் முருகப் பெருமானின் தனிப்பெருஞ் சிறப்புகளைத் தெள்ளிதின் விளக்குகின்றது. ஆழ்வார்களின் அருளிச் செயல்களை அருளாளர் நாத முனியடிகள் அடைவுபடுத்தி நாலாயிரம் என அழைத்த சீர்மையினை நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்' என்னும் கட்டுரை விளக்குகின்றது. ஆ ரா க் கா த ல் குருகூர்ச் சடகோபன் எம்பெருமான்மீது கொண்டிருந்த தீராக் காதற் பெருமையினை, ஆழ்வார்தம் ஆன்மாதுபவத்தை நம்மாழ்வாரின் இறையதுபவம் என்னும் கட்டுரை விளக்குகின்றது. புலவர்க்கு அறிவுரை என்னும் ஒப்பியலாய்வு வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்" என்னும் சங்கப் புலவர்தம் கோட்பாட்டைப் பின்பற்றி நம்மாழ்வாரும் சுந்தர மூர்த்தி நாயன்மாரும் பொருள்