பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(xii) நோக்கம் கொண்டு புல்லியரைப் பாடாதீர்; புலவீர்காள், அருள் நோக்கம் பற்றி அரி அரனைப்பாடி உய்ம்மின்” என்று அறிவுறுத்தும் பாங்கினை அழகாக எடுத்துரைக்கின்றது. தமிழர்தம் திருமறையாம் திருக்குறள் சமயப் பொதுமை யுடையது என்பதை மற்றொரு கட்டுரை காட்டுகின்றது. வைணவக் கோட்பாட்டின் கெளஸ்துபமாகிய சரணாகதித் தத்துவத்தை வேதங்களின் சாரமாகிய கீதையைக் கொண்டும் தமிழ் வேதம் தந்தருளிய மாறன் திருவாய்மொழி கொண்டும் விளக்கியுரைப்பன இரண்டு கட்டுரைகள், கீதை சுருதியாகவும் சுமிருதியாகவும் அமைந்து துவைதம், அத்துவிதம், விசிட்டாத்துவிதம் என்னும் மூவகைத் தத்துவக் கோட்பாடுகளுக்கும் உயிரூற்றாக அமைந்துள்ள திறத்தைக் கீதை-மறைமுடியின் சாரம் என்னும் அரிய கட்டுரை தெளிவிக்கின்றது. சரணாகதி நெறி' என்னும் கட்டுரை வைணவர்க்கோர் ஒளடதம் எனலாகும் தன்மை பெற்ற ஆன்மநேயக் கைவிளக்கு எனப் புகழத்தக்கது. சரணாகதி என்னும் பிரயத்தி நெறி வைணவத்தில் மட்டுமின்றிச் சைவத்திலும் விவிலியத்திலும் அமைந்துள்ள நுட்பத்தினை இக்கட்டுரை எடுத்துக் காட்டுகின்றது. பல்வேறு தோத்திர, சாத்திர, வியாக்கியானங்களில் பொதிந்து கிடக்கும் தத்துவப் பேருண்மைகளையெல்லாம் ஒருங்கு தொகுத்துச் சரணாகதி நெறியின் அருமையையும் எளிமையையும் ஒக்க விளக்கும் இக் கட்டுரை பேராசிரியரின் ஆசாரிய செளலப் பியத்துக்குத் தக்கதோர் எடுத்துக் காட்டாக விளங்கு கின்றது. - வாய் மொழியும் வாசகமும் என்னும் இந்நூல் பல உதிரிக் கட்டுரைகளின் தொகுப்பாகத் தோற்றமளிப்பினும் இறையுண்மை, இறைத்தன்மை, இறையதுபவம் என்னும் முப்பெரும் உண்மைகளை அருளாளர்களின் திருவாக்கு, ஆசாரியர்களின் மெய்யுணர்வு, அறிவியலாரின் ஆய்வு நோக்கு என்னும் முத்திறக் கோணங்களின் வழி ஆய்ந்து தெளிவிக்கும் நோக்கத்தை அடி நாதமாகக் கொண்டு