பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசகமும் § 3. தனிமாப் புகழே எஞ்ஞான்றும் கிற்கும் படியாத் தான் தோன்றி, முனிமாப் பிரம்ம முதல்வித்தாய், உலகம் மூன்றும் முளைப்பித்த தனிமாத் தெய்வம் (8, 10:7) - என்ற பாசுரத்தால் அறுதியிடுவதையும் கண்டு தெளியலாம். புராணச் செய்திகளாலும் வேறு வகையினாலும் விட்டுனுவே பரதெய்வம் என்பதை ஆழ்வார் புலப்படுத்து வதையும் காணலாம். நம்மாழ்வார் வாணாசுரன் கதையில் கண்ணன் அவனுடைய ஆயிரம் தோள்களைத் துணித்த செய்தியை எடுத்துக்காட்டி விட்டுணுவின் பரத்துவத்தை நிலைநாட்டுவதுடன் போரில் சிவன் முதலியோர் அடைந்த தோல்வியையும் காட்டி அவர்களது தாழ்நிலையையும் புலப்படுத்துகின்றார். பரிவின்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்தெதிர்ந்த திரிபுரம் செற்றவ னும்மக У . னும்பின்னும் அங்கியும் போர்தொலைய பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொற்சக்கரத்(து) அளியினை அச்சுத னைப்பற்றி யான் இறையேனும் இடரிலனே (3.19:4) என்ற பாசுரத்தில் இதனைக்காணலாம். இன்னும், வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம்பெறத் துந்தித் தலத்துஎழு திசைமுதன் படைத்தகல் உலகமும் தானும் புலப்படி (1,3:9) என்ற பாசுரமும், 1. திருவாய் 2.4:2; 3.8:9: 4.8:9; 7.4:8; 7.10.7 #### பாசுரங்களிலும் வாணன் வரலாறு குறிப்பிடப் பெறுகின்றது