பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ வாய்மொழியும் வாசகமும் பேச கின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாய கன்.அவனே கபாலகன் மோக்கத்துக் கண்டு கொண்மின் (4.10:4) என்ற பாசுரமும், யானும் தானாய் அழிந்தானை யாதும் எவர்க்கும் முன்னோனை தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பனைத்த தனிமுதலை (8.8:4) என்ற பாசுரமும்: தானோர் உருவே தனிவித்தாய் தன்னின் மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் தானோர் பெருர்ே தன்னுள்ளே தோற்றி, அதனுள் கண்வளரும் வானோர் பெருமான் (1.5:4) என்ற பாசுரம் திருமாலின் பரத்துவத்தையும் ஏனை யோரின் தாழ்நிலையையும் காட்டுகின்றன. இங்ங்னம் பல பாசுரங்கள், - மணிவாசகப் பெருமான் சிவனையே முழுமுதற் கடவுளாகக் கொள்வர். கொள்ளேன் புரந்தர்ன் மாலயன் வாழ்வு குடிகெடினும் கல்லேன் ... . ... ... ... உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதுளங்கள் உத்தமனே (6)