பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏3忍 வாய்மொழியும் வாசகமும் தாவென்ன நாவே, நாராயணா என்னா நாவென்ன நாவே" (சிலப் ஆய்ச். குர) என்ற இளங்கோ அடிகளின் வாக்கினா லும் இதனை அறியலாம். சக்கரக்கையனான எம்பெருமான் என் வாக்குக்கே இலக்காக உள்ளான். இஃது எப்படித் தெரிகின்றது? என்னில்: 'பெருங்கேழ லார்தம் பெருங்கண் மலர்ப்புண் டரீகம்.கம்மேல் ஒருங்கே பிறழவைத் தார் இவ்வ காலம் ஒருவர் கம்போல் வருங்கேழ் பவருளரே (திருவிருத், 45) என்னும்படி தன் கடைக்கண் பார்வையை என் பக்கவி லேயே ஒருமடை செய்தது போலத் தன்னைப் பற்றிக் கவி யிடுவதையும் என்னொருவனுக்கே உரித்தாக்கியருளினான் எம்பெருமான்', என்கின்றார். எனக்கே என்பதில் உள்ள ஏகாரம் எம்பெருமானைப் பொருளாகக் கொண்டது என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்பது தெரிவிக்கப் படுகின்றது. வலக்கை யாழி இடக்கைச் சங்கம் இவையுடை மால்வண்ண்னை மலக்கும் நாவுடையேற்கு மாறுள தோஇம் மண்ணின் மிசையே -திருவாய் 6.4:9 என்று பின்னும் கூறுவர். மோட்ச சுகத்திலும் நன்றாம்படி இவ்வுலகத்திலேயே தன் அநுபவமே யாத்திரையாம்படி செய்து தந்தானாதலின் *சாய்கொண்ட இம்மை" என்கின்றார். இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன். (திருமாலை 9) என்றவாறு பகவத் குணாதுபவத்தையே அந்த சுகமாகக் குறிக்கின்றார். எம்பெருமான் பரமபதத்தை நித்தியமுக்தர் களிட்ட வழக்காம்படி அவர்கட்கு உரிமையாக்கி, அவ்விடத்