பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்க்கு அறிவுரை 1.33 தில் தான் பிறர்மனையில் குடியிருப்பவன் போல இருக் கின்றான் என்று தோன்றுமாறு வானவர் நாடு’ என்கின்றார். வாணிளவரசு வைகுந்தக்குட்டன்’ (பெரியா. திரு 3.6:6) என்றார் பெரியாழ்வாரும். இறுதிப் பாசுரத்தில் உலகம் படைத்தான் கவியான எனக்குப் பிறரைத் துதிக்கும் காரணம் ஏற்றதன்று” என்கின்றார். கின்றுகின்று பலநாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்ச் சென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழிப் பானெண்ணி ஒன்றியொன்றி உலகம் படைத்தான் கவியாயி னேற்கு என்றுமென் றும்இனி மற்றொரு வர் கவி ஏற்குமே (10) என்பது பாசுரம், உலகில் வேளாண்மையில் ஈடுபட்டவன் தான் மேற்கொண்ட தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிட்டா தொழிந்தாலும் இன்னமும் ஒரு தடவை செய்து பார்ப்போம் என்று மீண்டும் மீண்டும் நசையாலே வேளாண்மையை விட்டொழியான். அது போல எம்பெரு மானாகிய பக்தியுழவனும் (நான். திருவந்: 23) பக்தி வேளாண்மை செய்து வருபவனாதலால், அத்தொழில் எத்தனை தடவை முட்டுப்பட்டாலும் 'இன்னொருதடவை யிலாகிலும் பலிக்க மாட்டாதோ என்று மீண்டும் மீண்டும் உலகப் படைப்பைச் செய்தருளுகின்றான். காலம் உள்ள அளவும் ஆன்மாவைத் தன் வசத்தில் இழுத்துக் கொண்டு சென்று அனர்த்தங்களுக்கு ஆளாக்குவது இந்த உடல். ஆன்மா உடலை விட்டும் போகக்கூடிய வழிகள் கர்ப்பகதி: யாம்யகதி, துரமகதி, அர்ச்சிராதிகதி என்ற நான்காகும். அர்ச்சிராதிகதி வழியாக ஆன்மா பரமபதத்தை அடைந்து தன்னை அநுபவிக்கப்பெற வேண்டும் என்று எம்பெருமான்